இன்றைய ராசிபலன் – 8 அக்டோபர் 2023

daily-rasi-palan8
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று தைரியத்தோடு புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வெற்றியா தோல்வியா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள். எதற்கும் பயமில்லாமல் துணிச்சலோடு செயல்படும் உங்களுக்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த நாள் இறுதியில் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. அலட்சியமாக இருந்தால் ஏதாவது பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று வரக்கூடிய சிக்கல்களில் தீர்வு காண பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்கள் சரியாகும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருந்துக்கோங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நல்ல உறவுகள் நல்ல நண்பர்களை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கூட பணி புரியும் நண்பர்களே ஏமாற்றுவார்கள். பெரிய அளவில் இன்று பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்க போகின்றது. எதிர்பாராத விதத்தில் ஏதாவது ஒரு லாபம் கிடைக்கும். அது சொந்த தொழிலின் மூலமாக இருக்கலாம். அல்லது அலுவலகத்தில் இன்சென்டிவ் கூட கொடுக்கலாம். அல்லது சில பேருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வீட்டில் சின்ன சின்ன சந்தோஷங்கள் மன நிம்மதியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய சந்தோஷம் இருக்கும். அதே சமயம் இந்த நாள் இறுதியில் சின்ன கஷ்டம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. நீங்களே சந்தோஷத்தையும் துக்கத்தையும் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க. நல்லது நடந்தால் அளவோடு சந்தோஷப்படுங்கள். கெடுதல் நடந்தால் அளவோடு கஷ்டப்பட்டு கொள்ளுங்கள். வீட்டில் தாய்மாமன் உறவால் நன்மை ஏற்படும். சுப காரிய செலவு ஏற்படும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ஆரோகியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும். அதிகப்படியான காரம் சாப்பிட வேண்டாம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்தால் டாக்டரை அணுகவும். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். தொழிலை விரிவு படுத்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கமிஷன் தொழில் லாபம் தரும். கட்டுமான தொழிலும் லாபம் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை இருக்கும். குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய மனிதர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை கொடுக்கும். நீண்ட நாள் அசைய நிறைவேற வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் பிரஷர் இருக்கும். சில பேருக்கு செய்யும் வேலையை விட கூடிய அளவுக்கு பிரச்சனை கூட வாய்ப்பு உள்ளது பாத்துக்கோங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பம்பரம் போல சுற்றி சுற்றி எல்லா வேலையும் முடிச்சிடுவீங்க. மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் நிலவும். வாழ்க்கை துணைக்கு ஆடம்பரமான, பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். மெக்கானிக் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருங்க. யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. யாரிடமும் கடன் வாங்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று மனசுக்கு புடிச்ச செயலை செய்வீர்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிடவும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், அந்த எடையை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கிய ரீதியாக பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

- Advertisement -