இன்றைய ராசி பலன் – 8-2-2021

rasi palan - 8-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வாழ்வின் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்கள் அத்தனையும் எளிதாக எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சகல நன்மைகளும் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களிடம் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி பரஸ்பர அன்பு ஒற்றுமை பிறக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் லாபம் காணலாம். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அதிர்ஷ்டமான யோகம் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் காணப்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குவீண்பழி சுமப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் உருவாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு இறைவழிபாடு செய்வது அவசியமாகும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடுவதில் தாமதம் உண்டாகும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார், உறவினர்கள் வழியிலும் சாதகப்பலன் உண்டாகும். சுய தொழில் லாபம் தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்குப் பிடித்த நிகழ்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் மற்றும் வெளிநாடு போன்ற விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் காணப்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உங்களுக்கு ஜெயம் உண்டாகும். குடும்பத்தினருடன் செலவிடக் கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வேலைப்பளுவை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் இருந்தாலும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு இடையூறுகள் ஏற்படலாம். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துவது உத்தமம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். எடுக்கும் முயற்சியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய விஷயத்தில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -