இன்றைய ராசி பலன் – 8-2-2020

rasi palan - 8-2-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமா? என்ற மனக்குழப்பத்தில் இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கட்டாயம் வெற்றி அடையும். பெண்களுக்கு திருமண யோகம் கூடிவரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய கல்வி வாய்ப்புகள் உண்டாகும். மேல்நாடுகளில் கல்வி கற்பவர்கள் வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. நண்பர்கள் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். பெண்களுக்கு இலாபகரமான நாளாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். மன நிம்மதி உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார பற்றாகுறை இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் திருமண பேச்சுவார்த்தைகள் நடக்கும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். சக பணியாளர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் சமாளிப்பீர்கள். புதிய உத்திகளை கையாண்டு நல்ல பலன் காண்பீர்கள். குடும்ப நபர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க பெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் நற்பெயர் கிட்டும். புதிய நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். மனதிற்கு பிடித்தவர்களால் சில மன சங்கடங்கள் வரலாம். எனினும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கட்டாயம் அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். பொருளாதார பற்றாக்குறை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நீடித்திருக்கும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கால தாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பினும் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான விஷயங்கள் நடைபெறும். வேலைவாய்ப்பு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். வெளிநாடுகள் செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனைவி வழி உறவினர்களால் நல்ல செய்திகள் வரும். உடன் பிறந்தவர்கள் உடனான பிரச்சனைகள் தீரும். வாகன வகையில் லாபம் உண்டு.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி சீராக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில குழப்பங்கள் இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ள மூத்த நபர்களால் நல்ல பாதை தென்படும். வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்தோர்க்கு நல்ல செய்தி உண்டு. உடன் பிறந்தவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொறுமை தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார பற்றாக்குறை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகாரமான ஒரு நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளில் கவனம் தேவை. கவனச் சிதறலினால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனினும் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் சரியாகிவிடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் கையெழுத்து இடுவதில் எச்சரிக்கை தேவை. கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில மன சங்கடங்கள் உருவாகி மறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பொருளாதார பற்றாக்குறை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை நிலவும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான ஒரு நாளாக இருக்கும். வெளிநாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அதனை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி காணும் நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருப்பது அவசியமான ஒன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக இருக்கும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருளை வாங்கி குவிக்கும் யோகமுண்டு. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றத்துடன் காணப்படும். கூடுதல் முயற்சி எடுப்பதால் தங்களை திறமைகள் வெளிப்படும். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வளம் சிறக்க நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில மன சங்கடங்கள் உருவாகக்கூடும். பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்காக திட்டமிட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மனதிற்கு பிடித்தவர்களின் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு சுய தொழில் முன்னேற்றம் உண்டு. லாபகரமான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதி உண்டு. மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்கள் இடத்தில் நட்பு கொள்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு. இடமாற்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு பொருட்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. குடும்பத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் உண்டு. குடும்ப நபர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும் எனினும் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர் கல்வி பயில்பவர்கள் தங்களின் முயற்சிக்கு உரிய பலன்களைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சிறிது மன உளைச்சல் ஏற்படும். அந்த கோபத்தை வீட்டில் உள்ளவர்களிடம் காண்பித்தால் சில சங்கடங்கள் உருவாகும் எனவே பொறுமையை கையாள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பொருளாதார பற்றாக்குறையை சுலபமாக சமாளிப்பீர்கள். சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -