இன்றைய ராசிபலன் – 9 அக்டோபர் 2023

daily-rasi-palan9
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ஆனால் யார் சொன்னாலும் சரி, உங்கள் பணத்தை இன்று எந்த தொழிலிலும் முதலீடு செய்யக்கூடாது. யாருக்கும் கடனும் கொடுக்க கூடாது. காசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் பிளான் செய்யாத பல விஷயங்கள் நடக்கும். அதுவும் உங்களுக்கு சாதகமாக நிறைய ஆச்சரியங்கள் இந்த நாளின் இறுதியில் மறைந்திருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். இந்த நாள் உங்களுக்கு இனிய நாள்தான்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருக்கும். தெளிவான சிந்தனை இருக்காது. எந்த முடிவை எடுப்பது என்பதில் சில குழப்பங்கள் ஏற்படும். குழப்பமான இந்த மனநிலையோடு புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். முன்கோபத்தால் அடுத்தவர்கள் மனசு புண்படும் படி பேசாதீங்க. வீண்பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் அசதி இருக்கும். எதையோ இழந்தது போல மனம் சோர்வாக இருக்கும். அதனால் வேலையில் பின்னடைவு ஏற்படும். மற்றபடி எந்த பிரச்சனைகளும் இருக்காது. கூடுமானவரை முடிந்தவர்கள் வேலைக்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுங்க.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சொந்த தொழிலில் புதிய முயற்சிகளை வெற்றி கிடைக்கும். தொழிலை மேம்படுத்த புதிய முதலீடுகள் கடனாக கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிரிகளால் பிரச்சனைகள் வரும்‌. நீங்கள் ஒதுங்கி சென்றாலும் உங்களை சண்டைக்கு இழுத்து விடுவார்கள். கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. முன்பின் தெரியாதவர்களிடம் நட்பு வைக்க வேண்டாம். யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால் அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் நீங்களே தொலைபேசியில் அழைத்து நிலைமையை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அமைதியாக இருக்கும். எந்த ஒரு குழப்பமும் இருக்காது. பெரிய மகான் போல இருப்பீர்கள். எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். மனைவி உங்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு வாழ்க்கையை அனுசரித்து செல்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எண்ணங்கள் பெரிய அளவில் இருக்கும். யார் உதவி என்று வந்து கேட்டாலும், அதை செஞ்சிடுவீங்க. மன நிறைவும் அடைவீர்கள். குறிப்பாக அன்னதானம், ஆசிரமங்களுக்கு செல்வது இப்படிப்பட்ட பொதுப்பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய சிந்தனை அனைத்தும் சேவையிலேயே இருக்கும். இன்று நீங்கள் செய்யும் தர்மம் உங்கள் தலைமுறையை காக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக அமையும். நஷ்டமான விஷயங்கள் கூட லாபமாக மாறும். எதிர்காலத்திற்கு சேமிக்க தேவையான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்குவது பிள்ளைகளுக்கு எதிர்கால தேவைக்கு பணத்தை வங்கியில் போடுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் நன்மை நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று யோசனை நிறைந்த நாளாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி ரொம்பவும் கவலைப்படுவீங்க. குடும்பம் குழந்தை மனைவி இவர்களுடைய அக்கரையில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். விவசாயிகளுக்கு இந்த நாள் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கும். மனைவியிடம் போட்ட சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்பத்தோடு ஒற்றுமையாக வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கழிப்பீர்கள். கையில் இருக்கும் காசு கொஞ்சம் வீண் விரைய செலவு ஆகும். பெண் பிள்ளையால் மனது சந்தோஷம் அடையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய மேலதிகாரிகள் உங்களை கூப்பிட்டு பெரிய பொறுப்பை ஒப்படைப்பாங்க. அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். எதிர்காலம் நன்றாக இருக்க இன்றைய நாள் நீங்கள் செய்யக்கூடிய முயற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்லது நடக்க இன்று பிள்ளையார் சுழி போடலாம்.

- Advertisement -