இன்றைய ராசி பலன் – 9-2-2021

rasi palan - 9-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் லாபம் தரும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முடிவை சாதக பலன்களை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு சுமாரான பலன்களே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். உற்றார், உறவினர்களுக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்கும் முடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றிகள் குவியும் அற்புதமான நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயலாற்றுவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. குறிப்பாக பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பலவீனம் அறிந்து செயல்பட கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் அனுகூலப் பலன்களைக் கொடுக்கும்.

மகரம
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களில் லாபத்தை காணலாம். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புது பொறுப்புகளை சமாளிக்க போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை நீங்கள் காணாத வளர்ச்சியைக் காணலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். தொழில் விருத்தி பெற புதிய முயற்சிகளை செய்வீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்த ஊடல் நீங்கி பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இதுவரை நிழுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -