இன்று தேய்பிறை அஷ்டமி! தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் அஷ்டமி வழிபாட்டை, வீட்டிலிருந்தே எப்படி நிறைவு செய்வது.

bairavar

தேய்பிறை அஷ்டமி தினமான இன்று நம்மில் பலபேர் சிவாலயங்களுக்கு சென்று பைரவரை வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இன்று கோவில்களும் திறக்கப்படவில்லை. நாம் கோவிலுக்கு செல்ல கூடிய சூழ்நிலையிலும் இல்லை. இப்படி இருக்க காலபைரவரின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற வீட்டிலிருந்தே எப்படி வழிபாடு செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

kaala bairavar

இந்த அஷ்டமி தினத்தில் பைரவருக்கு வடைமாலை சாத்தி, அரளி பூவால் அர்ச்சனை செய்து, மிளகு சாதம் அல்லது தயிர் சாதத்தை நைவேத்யமாக படைத்து வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி வேண்டிக் கொண்டால் நமக்கு இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆனால் இந்த சூழ்நிலையில் என்ன செய்வது? வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு தெரிந்த பைரவரின் ஸ்லோகங்களை உச்சரியுங்கள். ஸ்லோகங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும் ‘ஓம் பைரவாய நம’ என்ற மந்திரத்தையாவது உச்சரித்துக் கொண்டே இருங்கள். தெருவில் வரும் நாய்களுக்கு உணவாக பிஸ்கட்டை வழங்கலாம்.

kaala bairavar

வீட்டிலேயே மிளகு சேர்த்த வெண்பொங்கல் தயாரித்து, அல்லது தயிர்சாதம் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை தயாரித்து நான்கு ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். இன்றைக்கு இப்படி செய்யும் பட்சத்தில் பைரவரின் முழுமையான ஆசீர்வாதத்தை நம்மால் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று பைரவரை வழிபட முடியாத சூழ்நிலையிலும் இப்படி ஒரு பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம், நமக்கு இருக்கும் தீராத நோய் தீரும். கடன் பிரச்சனைகள் விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் விலகும்.

bairavar

எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். இப்படி நம் வாழ்க்கையில் இருக்கும் பலவகைப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை தேடித்தரும் இந்த அஷ்டமி தினத்தை யாரும் தவறவிடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
பர்ஸில் பணம் எப்பவும் இருக்க வேண்டுமா? இந்த ஒரு 1 வேரை மட்டும், 30 நாட்கள் உங்களோட பர்ஸில் வைத்து தான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ashtami palangal in tamil. Ashtami valipadu. Ashtami bairavar valipadu Tamil. Ashtami thithi Tamil.