- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்டாய்லெட்டை கிளீன் பண்ண தரமான ஐடியா இது தாங்க. செலவும் கம்மி, கறையும் ஒரு துளி...

டாய்லெட்டை கிளீன் பண்ண தரமான ஐடியா இது தாங்க. செலவும் கம்மி, கறையும் ஒரு துளி கூட இருக்காது.

- Advertisement -

நம்முடைய வீட்டு டாய்லெட்டை எப்போதும் பளிச் பளிச் என மணக்க மணக்க வாசமாக வைத்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. டாய்லெட் மணக்க வேண்டுமா என்று சில பேர் யோசிக்கலாம். கழிவறையாக இருந்தாலும் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசக்கூடாது. அந்த இடத்தில் கறைகள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்தான் அந்த வீட்டில் ஆரோக்கியம் இருக்கும். உங்கள் வீட்டு டாய்லட்டையும் கறைகள் இல்லாமல் துர்நாற்றம் வீசாமல் வைத்துக் கொள்ள இதோ ஒரு சூப்பரான ஐடியா. ஹேப்பிக், ப்ளீச்சிங், ஆசிட், எதுவுமே தேவையில்லை. வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து இந்த லிக்விடை நாம் தயார் செய்ய போகின்றோம். வாங்க அந்த பயனுள்ள குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

டாய்லெட் கறையை நீக்கும் ஈனோ சால்ட்:
ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஈனோ சால்ட் – 1 சின்ன பாக்கெட், சபீனா அல்லது பீதாம்பரம் பவுடர் – 1 டேபிள்ஸ்பூன், லைசால் – 3 மூடி, கம்போர்ட் – 1 மூடி, இந்த பொருட்களையெல்லாம் ஊற்றி கலந்தால் நுரைத்து பொங்கி நமக்கு ஒரு லிக்விட் கிடைக்கும். அதில் ஒரு சின்ன டம்ளர் அளவு தண்ணியை ஊற்றி நன்றாக கலந்து ஒரு வாட்டர் கேனில் ஊற்றிக் கொள்ளுங்கள். வாட்டர் கேன் மூடியில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு, பயன்படுத்த போகின்றோம்.

- Advertisement -

வாட்டர் கேனை ஸ்ப்ரே பாட்டில் போல பயன்படுத்துங்கள். மஞ்சள் கறை, உப்பு கறை அழுக்கு படிந்த டாய்லெட்டுக்கு மேலே நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த லிக்விடை ஸ்பிரே செய்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு பிரஷ் போட்டு தேய்த்து கழுவி விட்டால், போதும். டாய்லெடில் பல வருடங்களாக படிந்திருக்கும் மஞ்சள் கறை, உப்பு கறை அனைத்தும் முழுமையாக நீங்கி உங்களுடைய டாய்லெட் வாசமாக இருக்கும்.

உங்களால் இடையே ஒருநாள் டாய்லெட்டை சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த ஸ்பிரேவை அப்படியே டாய்லெட்டில் ஊற்றி விட்டு பத்து நிமிடங்கள் கழித்து ஃபிளஸ் செய்து விட்டால் அழுக்கு அத்தனையும் அடித்துச் செல்லும். வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள். சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இருக்கிறார்கள். டாய்லெட் சுத்தம் செய்ய முடியாது என்பவர்கள் இந்த எளிமையான குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். நிச்சயமாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டு சிங் வாசமாக இருக்க:
எலுமிச்சம்பழத் தோல் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா. சமைத்த பின்பு அந்த எலுமிச்சம்பழத் தோலை தூக்கி குப்பையில் போடாதீங்க. ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி, அதில் இந்த எலுமிச்சம் பழங்களை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், அப்படியே இருக்கும். தேவைப்படும்போது அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்ச பழத்தோலை 4 துண்டு துண்டுகளாக வெட்டி, சிங்க் ஓட்டையில் வைக்கவும். அதன் மேலே ஆப்ப சோடா 1 ஸ்பூன், போடவும். வாசனைக்காக கம்போர்ட் 1 ஸ்பூன் ஊற்றி, அப்படியே விட்டுவிடலாம்.

இதையும் படிக்கலாமே: பாத்ரூமில் 10 வருஷமா போகாத உப்பு கறையை வெறும் பத்தே ரூபாய் செலவில், 10 நிமிடத்தில் போக்கிவிடலாம். பாத்ரூமை பளிச்சிட வைக்க பக்காவான ஐடியா.

1/2 மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரை இதன் மேலே ஊற்றி விட்டால் உங்களுடைய சிங்க் அடிக்கடி அடைகாத்து. அதே சமயம் அசைவம் செய்தாலும் சிங் ஓட்டையிலிருந்து கெட்ட துர்நாற்றம் வீசாது. சிங் எப்போதும் வாசமாக இருக்கும். கரப்பான் பூச்சி வராமல் இருக்கும். இந்த எளிமையான இரண்டு வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்க்கலாம்.

சற்று முன்