பாத்ரூமில் 10 வருஷமா போகாத உப்பு கறையை வெறும் பத்தே ரூபாய் செலவில், 10 நிமிடத்தில் போக்கிவிடலாம். பாத்ரூமை பளிச்சிட வைக்க பக்காவான ஐடியா.

bathroom
- Advertisement -

பெரும்பாலும் உப்பு தண்ணீர் புழக்கத்தில் இருக்கக்கூடிய எல்லோர் வீட்டிலும் பாத்ரூமில் உப்பு கறை படிந்திருக்கும். அந்த கறை பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கும். பாத்ரூமை நாம் கழுவவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அசுத்தமாக இருக்கும். இந்த உப்பு கறையை போக்குவதற்கு பல கெமிக்கல் கலந்த ஆசிட் உள்ளது. ஆனால் அந்த ஆசிடை தொடர்ந்து நம்மால் பாத்ரூமில் பயன்படுத்த முடியாது. அது நம்முடைய சுவாசத்திற்கும் நல்லது அல்ல. ஆரோக்கியத்திற்கும் நல்லது அல்ல. நம்முடைய சருமத்திற்கும் நல்லது அல்ல. ஆக கெமிக்கல் எதுவும் கலக்காமல், பல நாள் படித்திருக்கும் உப்பு கறையை பாத்ரூமில் இருந்து நீக்குவதற்கு ஒரு எளிமையான பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

பல வருடமாக நீக்க முடியாத பாத்ரூம் உப்பு கறையை நீக்க சுலபமான ஐடியா:
பாத்ரூம் உப்பு கறையை நீக்குவதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். சீயக்காய் தூள், புளித்த தயிர் அல்லது புளித்த மாவு, ஷாம்பு.

- Advertisement -

இந்த 3 பொருட்கள் மட்டும் போதும். ஒரு பவுலில் சீகைக்காய் தூள் 3 ஸ்பூன், புளித்த தயிர் அல்லது மாவு 4 டேபிள் ஸ்பூன், ஷாம்பு 2 டேபிள் ஸ்பூன், ஊற்றி மூன்றையும் கட்டிகள் இல்லாமல் கலந்து விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதை ஒரு லிக்விட் பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எந்த பிராண்ட் சீயக்காய், எந்த பிராண்ட் ஷாம்பூ வேண்டும் என்றாலும் நீங்கள் பயன்படுத்தலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

இந்த லிக்விடை வைத்து தான் உப்பு கறையை சுத்தம் செய்யப் போகின்றோம். உப்பு கறை படிந்த இடத்தில் இந்த லீக்விடை நன்றாக தெளித்து, தடவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து விட வேண்டும். ஒரு ஸ்டீல் நாரை வைத்து, பிறகு லேசாக உப்பு கறை படிந்த இடத்தை தேய்த்துக் கொடுத்தாலே உப்பு கறையானது மொத்தமாக நீங்கிவிடும்.

- Advertisement -

டைல்ஸ், மார்பில், கல் என்று எந்தவிதமான கறை உங்களுடைய பாத்ரூமில் இருந்தாலும் அதில் இந்த லிக்விடை தாராளமாக பயன்படுத்தலாம். இதே லிக்விடை சமையலறை சிங்க் மேடையில் கூட நீங்கள் உப்பு கறையை நீக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பல நாள் கஷ்டப்பட்டு செய்யிற வேலைகளை எல்லாம் பத்தே நிமிஷத்துல செஞ்சு முடிக்க நீங்க வேண்டாம்னு தூக்கி போடுற இந்த ஓரு பொருள் இருந்தா போதும். வாங்க அப்படி என்ன சீக்ரட்டான டிப்ஸ்ன்னு பார்க்கலாம்.

உங்களுடைய கைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சுவாச பிரச்சனையும் ஏற்படாது. அதே சமயம் மிக மிக சுலபமான முறையில் உப்பு கறையானது நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் பாத்ரூம் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமாக நான்கு ஐந்து டைல்ஸை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த லிக்விடை போட்டு தேய்த்து விடுங்கள். மறுநாள் மீதம் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் நிச்சயம் கைவலி வந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த எளிமையான வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -