காலை டிபனுக்கு அட்டகாசமான தக்காளி அவல் உப்புமா ரெசிபி.

tomato aval uppa recipe
- Advertisement -

உணவை பொருத்த வரையில் எந்த நேரத்தில் சமைத்தாலும் சரி சீக்கிரத்தில் சமைக்க வேண்டும். அதே நேரத்தில் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். இதைத் தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அப்படி காலை வேளையில் மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமான ஒரு உணவாக இந்த தக்காளி உப்புமா செய்யலாம்.

உப்புமா என்றவுடன் ரவை, சம்பா போன்றவற்றை வைத்து செய்யும் உப்புமா என்று நினைக்க வேண்டாம். இது அவலை வைத்து மிகவும் ஆரோக்கியமாக அதே நேரத்தில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான். வாங்க இப்போ அந்த உப்புமா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் -1, தக்காளி -1, அவல் – 100 கிராம், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு -5 பல், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1 சிட்டிகை, கருவேப்பிலை கொத்தமல்லி -1 கைப்பிடி, உப்பு -1/4 ஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், கடுகு -1 ஸ்பூன், உளுந்து -1 ஸ்பூன், கடலைப் பருப்பு -1 ஸ்பூன்.

செய்முறை

இந்த உப்புமா செய்வதற்கு முதலில் அவலை ஒரு முறை தண்ணீர் ஊற்றி அலசி விடுங்கள். அதன் பிறகு 10 நிமிடம் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்து அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இவை எல்லாம் சேர்ந்து பொறிந்த பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் லேசாக நிறம் மாறத் தொடங்கியவுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

அடுத்து அரிந்து வைத்த தக்காளியும் சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு என அனைத்தையும் சேர்த்து இந்த வெங்காயம், தக்காளி உடனே பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சாதாரண சட்னி செய்வதற்கு பதிலாக பீட்ரூட்டை வைத்து சுவையான சத்தான சட்னி செய்யலாம்

இவையெல்லாம் வதங்கிய பின்பு கடைசியாக ஊற வைத்து வடிகட்டிய அவலை இதில் சேர்த்து ஐந்து நிமிடம் மட்டும் கலந்து கடைசியில் கருவேப்பிலை கொத்தமல்லி மேலே தூவி இறக்கி விடுங்கள். சுவையான அவல் உப்புமா கமகமவென்று வாசத்துடன் தயார்.

- Advertisement -