டக்குனு ஒரு தக்காளி தோசை! 10 நிமிஷத்துல எப்படி செய்யறது? மிஸ் பண்ணாம தெரிஞ்சி வெச்சுக்கோங்க.

நம்முடைய வீட்டில் கட்டாயம் வைத்திருக்கும் சில பொருட்களை வைத்து தான் இந்த தோசையை தயார் செய்யப் போகின்றோம். காலைநேரத்தில் 10 நிமிடத்தில், ஒரு சூப்பரான தோசையை செய்து முடித்து விடலாம். குழந்தைகளுக்கு இதை வெறுமனே கொடுத்தால் கூட, அவர்கள் கையாலேயே எடுத்து, சாப்பிட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு ஒரு ருசியான கலரான தக்காளி தோசை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tameto

Step 1:
முதலில் ஒரு சின்ன மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பழுத்த 2 தக்காளியை, துண்டுகளாக வெட்டிப் போட்டுக் கொள்ளவும். வர மிளகாய் 2, சீரகம் – 1/2 ஸ்பூன், சிறிய துண்டு இஞ்சி, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை. உங்களுடைய வீட்டில் காஷ்மீரி மிளகாய் இருந்தால், 1 மிளகாயை இந்த தக்காளி விழுதோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

Step 2:
அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த விழுதோடு, ரவை – 1/2 கப், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு இவைகளை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். (தேவைப்பட்டால் மொறு மொறு சுவை அதிகம் வேண்டும் என்றால், அரிசிமாவை இன்னொரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கூட போட்டுக்கொள்ளலாம். கோதுமை மாவை குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.)

dosa1

இந்த தோசையை ரவையை வைத்து செய்வதால், இந்த மாவு ஏழிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை அப்படியே ஊறட்டும். அப்போதுதான் தண்ணீரை உறிஞ்சி மாவு பக்குவத்திற்கு வரும். ஊற வைத்த மாவு கொஞ்சம் கெட்டியாக மாறி இருக்கும். மீண்டும் அதில் கொஞ்சம் தண்ணீரை விட்டு ரவை தோசை பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இந்த மாவில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தழையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 3:
இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் பல், முழு மிளகு 10 இவைகளை போட்டும் தோசை வார்க்கலாம். சுவை கூடுதலாக இருக்கும். ஹோட்டலில் ரவா தோசை செய்வார்கள் அல்லவா அதுபோன்று!

dosa3

அப்படி மாவில் கலந்து உங்களுக்கு தோசை வார்க்க முடியாது என்றால், முதலில் தோசை கல்லை நன்றாக சூடு படுத்தி விட்டு, அதன் பின்பு தோசைக் கல்லில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துண்டு மிளகு சிறிதளவு தூவி, அதன் மேல் தோசை வார்த்தாலும், தோசையில் வெங்காயம் எல்லாம் ஒட்டி, நன்றாக தான் வரும்.

Step 4:
தோசையை ஊற்றி தேய்க்கக் கூடாது. ரவை தோசை போல கரண்டியில் எடுத்து கடாய் முழுவதும் பரவலாக ஊற்றி விட வேண்டும். தோசை ஊற்றும்போது தோசை கல் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். தோசையை ஊற்றிய பின்பு அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். ஏனென்றால் தோசை ஊற்றிய உடன் ஓட்டை ஓட்டையாக வந்தால்தான் மொறு மொறு சுவை கிடைக்கும்.

tamato-dasa1

மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை தோசை மிதமான தீயில் வெந்த உடன் அதை திருப்பி கூட போடத் தேவையில்லை. அப்படியே எடுத்து தேங்காய் சட்னியோடு அல்லது உங்களுக்குப் பிடித்தமான சட்னியோடு பரிமாறிக் கொள்ளுங்கள். படித்து பார்ப்பதற்கு இந்த தோசையின் குறிப்பு பெரியதாக தெரிந்தாலும், இந்த குரூப்பில் சொல்லியுள்ளபடி, சின்ன சின்ன டிப்ஸ் யூஸ் பண்ணினா சூப்பரான புது விதமான சுவையில் ஒரு தோசை கிடைக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
தக்காளி சாதத்தை வித்தியாசமா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்களேன். சூப்பர் கலர், சூப்பர் டேஸ்ட், சூப்பர் வாசம் ‘வித்தியாசமான ரிச்சான டொமேட்டோ ரைஸ்’ ரெசிபி உங்களுக்காக!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.