தக்காளி சாதத்தை வித்தியாசமா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்களேன். சூப்பர் கலர், சூப்பர் டேஸ்ட், சூப்பர் வாசம் ‘வித்தியாசமான ரிச்சான டொமேட்டோ ரைஸ்’ ரெசிபி உங்களுக்காக!

பிரியாணிக்கு சுவைக்கு ஈடாக சொல்லப்பட்ட இன்னொரு வகை சாதம் தான் தக்காளி சாதம். இந்த தக்காளி சாதத்தை சுலபமான முறையில் குக்கரில் எப்படி செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தக்காளி சாதத்திற்கு சுவையை இன்னும் அதிகப்படுத்தி தரக்கூடிய ஒரு பொருளை நாம் சேர்க்கப் போகிறோம். அந்த ரகசிய பொருள் என்ன, என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணி, தக்காளி சாதம் செய்தல் டேஸ்ட் மிஸ் ஆகவே ஆகாது.

tomato

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், அன்னாசிப் பூ – 1, லவங்கம் – 2, பெரிய அளவிலான பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது – 2, பச்சை மிளகாய் – 3 கீனியது, மீடியம் சைஸ் தக்காளி பழுத்த பழம் – 5 பொடியாக நறுக்கியது, மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு.

Step 1:
1/2 மூடி தேங்காயைத் துருவி, தேங்காய்ப் பால் தண்ணீர் பதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2 – கப் அளவு பாசுமதி அரிசிக்கு, 3 1/2 கப் தேங்காய் பால் போதுமான அளவாக இருக்கும். பெரிய தேங்காய் மூடி ஆக இருந்தால் கொஞ்சம் தேங்காயை எடுத்து விடுங்கள். தேங்காய் பாலின் அளவிற்கு, தேங்காயைப் போட்டு, தண்ணீர் ஊற்றி தண்ணீர் பதத்தில்  பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருங்கள். தேங்காய் பால் திக்கா எடுத்தா தக்காளி சாதம் நல்லா இருக்காது.

thengai-pall

Step 2:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகம், சோம்பு, அன்னாசிப்பூ, லவங்கம், இவற்றை போட்டு பொரிய விடுங்கள். அதன்பின் பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறம் வரும் அளவிற்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகன உடன் பச்சை மிளகாய், தக்காளி, சேர்க்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி முக்கால் பாகம் வெந்து வதங்கியவுடன், இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்க்கவேண்டும் அடுத்தபடியாகத்தான் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், இவைகளை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும்வரை மசாலா பொருட்களை சிவக்க வைக்க வேண்டும்.

Step 3:
மொத்தமாக எல்லா பொருட்களும் வதங்கி எண்ணெய் பிரிந்து வருவதற்கு 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை எடுக்கும். தக்காளி வெந்து வதங்கிய உடனேயே தீயை மிதமாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி, லேசாக கொதி வந்தவுடன் பாஸ்மதி அரிசியைப் போட்டு, தேவையான அளவு உப்பை போட்டு, கிளறி விட்டு கொத்தமல்லி தழையை தூவி, நன்றாக கொதி வந்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு, மிதமான தீயில் ஒரு விஸில் வைத்தாலே போதும். அடுப்பை அணைத்துவிட்டு அதே சூட்டில் அடுப்பின் மீது குக்கரை விட்டு விடுங்கள். குக்கர் ஆவிரிலே மீதம் இருக்கும் அரிசி வெந்து விடும்.

tometo-rice1

அவ்வளவுதாங்க விசில் முழுக்க அடங்கியவுடன், குக்கரை திறந்து பார்த்தால் கமகம வாசத்தோடு தக்காளி சாதம் தயாராகியிருக்கும். மேலே சொன்ன வரிசையில், சரியான முறையில் பொருட்களை சேர்த்து வதக்கி ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த டிஸ் ரொம்பவும் பிடிக்கும். காரம் கொஞ்சம் தூக்கலாக வேண்டும் என்பவர்கள் மிளகாய் தூள் பச்சை மிளகாயை கூடுதலாக சேர்த்து சமைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சூப்பரான கத்திரிக்காய் தெரக்கல்! இட்லி தோசைக்கு இந்த சைட் டிஷ், ஒரு வாட்டி இப்படி செஞ்சு பாருங்க! வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.