வெங்காயம் இல்லாமல், வெறும் தக்காளியை வைத்து ஒரு புதுவிதமான குழம்பு. வெங்காயம் விக்கிற விலைக்கு, வெங்காயம் போட்டு குழம்பு எல்லாம் வைக்க முடியாது என்பவர்களுக்கு மட்டும் இந்த டிஷ்.

tometo-gravy
- Advertisement -

இன்னைக்கு தங்கம் விற்க்கின்ற விலைக்கு, தங்கம் வாங்க கூட நகைக் கடையில் கூட்டம் அதிகமாக உள்ளது. காய்கறிக் கடைக்குச் சென்று, வெங்காயம் வாங்குவது தான் பிரச்சனையே. அவ்வளவு விலை விற்க்கின்றது வெங்காயம். சரி, என்ன செய்வது? வெங்காயம் போடாமல் ஏதாவது ஒரு புதுவிதமான குழம்பு வைக்க முடியுமா? என்று யோசித்தால் அதுவும் முடியாது. கொஞ்சம் கஷ்டம்தான். வெங்காயம் இல்லை என்றால் ருசியும் குறைவு. இப்படி யோசிப்பவர்களுக்கு, ருசியான ஒரு சூப்பர் குழம்பு எப்படி செய்யறது? தெரிஞ்சுக்கலாமா? இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சுடச்சுட சாதம் எல்லாத்துக்கும் இதைத் தொட்டுக்கலாம்.

tomato

இந்த புதுவிதமான தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பழுத்த பெரிய எலுமிச்சைப்பழ அளவு தக்காளி – 3 பொடியாக நறுக்கியது, வறுத்த வேர்கடலை – 5 ஸ்பூன் அளவு, எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், பூண்டு – 4பல் தோலுரித்து பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை – 1 கொத்து, சீரகம் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.

- Advertisement -

Step 1:
முதலில் மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையை போட்டு, அரைத்துக் கொள்ளவேண்டும். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால், இந்த வேர்க்கடலை எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும். ஓரளவுக்கு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். 80 சதவிகிதம் அரை பட்டால் போதும். இந்த வேர்க்கடலைப் பொடி அப்படியே இருக்கட்டும்.

penut

Step 2:
அடுத்த படியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, இவைகளை போட்டு தாளித்து, அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு வதக்க வேண்டும். 2 நிமிடம் தக்காளிப்பழம் வதங்கியவுடன், குழம்புக்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இவைகளை சேர்த்து வதக்கி தக்காளியின் பச்சை வாடை போன பின்பு, 1/2 தம்ளர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, அதன்பின்பு, அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலைப் பொடியை கடாயில் சேர்க்கவேண்டும்.

- Advertisement -

Step 3:
வேர்க்கடலை பொடியை, தக்காளியோடு சேர்த்ததும், இந்தக் குழம்பு கட்டி பதத்திற்கு வந்துவிடும். ஒரு நிமிடம் வரை வதக்கி அதன்பின்பு, 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக குழம்பை கலந்துவிட்டு, ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, உப்பு காரம் சரி பாருங்கள்.

tometo-gravy2

அவ்வளவு தான். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி பரிமாறி வைத்தால், சைடிஸ் தயார். எவ்வளவு சுலபம்? ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க திரும்ப திரும்ப செஞ்சுகிட்டே இருபீங்க.

- Advertisement -