வெறும் 2 நிமிடத்தில் தக்காளி தோசை செய்வது எப்படி? பிரிட்ஜில் இருக்கும் இட்லி அல்லது தோசை மாவே இதற்கு போதுமானது.

tometo-dosai4
- Advertisement -

வெள்ளை நிறத்தில் தோசை சாப்பிட்டு அலுத்துப்போன குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இந்த சிவப்பு நிற தக்காளி தோசையை ஒரு முறை சுட்டு தாருங்கள். கொஞ்சம் மசாலா வாசத்துடன் கமகமக்கும் இந்த தோசை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதற்கு அதிகமாக சிரமப்பட தேவையில்லை. தக்காளியும் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

tometo-dosai1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பெரிய அளவு பழுத்த தக்காளி – 1, சிறிய துண்டு – இஞ்சி, சீரகம் – 1/4 ஸ்பூன், சோம்பு – 1/4 ஸ்பூன், பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை, மிளகாய் பொடி – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

- Advertisement -

அடுத்தபடியாக சிறிய பாத்திரத்தில் 5 லிருந்து 6 தோசை வரும் அளவிற்கு புளித்த தோசை மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இட்லி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. (கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பக்குவத்திற்கு கரைத்துக் கொள்ளலாம்.) இந்த மாவில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும். இந்த தக்காளி விழுதுக்கு 2 சிட்டிகை உப்பு சேர்த்து, 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவையும் இந்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு விட வேண்டும். (கடலைமாவு சேர்க்கும் போது இந்த தோசையின் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக அதிகரிக்கும். வீட்டில் கடலைமாவு இல்லை என்றால் இதைத் தவிர்த்துக் கொள்ளவும்.)

tometo-dosai2

கலந்த இந்த மாவை ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். அதன் பின்பு தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, இந்த தோசையை வார்த்து நெய் அல்லது எண்ணெய் சேர்த்து மொறுமொறுவென சுட்டு எடுத்தால் சூப்பரான தக்காளி தோசை ஐந்தே நிமிடத்தில் தயார்.

- Advertisement -

இந்த தோசைக்கு ஒரு நிமிடத்தில் ஒரு சட்னியை எப்படி செய்யலாம். ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் 1, தக்காளி பழம் 1, வர மிளகாய் 2, இஞ்சி ஒரு சிறிய துண்டு, புளி ஒரு பின்ச், பூண்டு பல் 2, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை புதினா, இதில் எது இருந்தாலும் அப்படியே பச்சையாக கொஞ்சம் இந்த சட்னியில் சேர்த்து தேவையான அளவு உப்பு வைத்து தண்ணீர் சேர்க்காமல் அப்படியே அரைத்து, தோசையுடன் சாப்பிடலாம்.

tometo-dosai2

அட்டகாசமாக இருக்கும். தேங்காய் சட்னி விருப்பம் என்றால் அதையும் இதற்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உடனடியாக உங்கள் வீட்டில் இருக்கும் தோசை மாவில் டக்குனு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்க வீட்ல இருக்கிற எல்லோருக்கும் பிடிக்கும்.

- Advertisement -