பல்லு தேய்க்கிற டூத் பேஸ்ட் இதுக்கெல்லாம் கூட பயன்படுமா? மீந்து போனா இனி தூக்கிப் போடாதீங்க!

tooth-paste-fridge
- Advertisement -

பல் தேய்க்கிற டூத் பேஸ்ட் கடைசியாக அடியில் கொஞ்சம் இருக்கும் பொழுது பலரும் அதை பயன்படுத்த முடியாமல் தூக்கி எறிந்து விடுவார்கள். ஒரு சிலர் வேறு டூத்பேஸ்ட் வாங்கும் வரை அதை எப்படியாவது பிதுக்கி பிதுக்கி பயன்படுத்துவது உண்டு. இப்படி மீண்டு போன டூத் பேஸ்ட்டை வைத்து வீட்டிற்கு தேவையான பயனுள்ள விஷயங்களைக் கூட செய்ய முடியும் என்று தெரிந்தால் இனியும் டூத் பேஸ்டை வீணாக்க மாட்டார்கள்! டூத் பேஸ்ட் பயன்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

குறிப்பு 1:
பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் என்கிற பற்பசை சுவற்றில் இருக்கும் அழுக்குகளை எளிதாக நீக்க கூடியது ஆகும். வெள்ளையாக இருக்கும் சுவற்றில் பெயின்ட் கரை ஆங்காங்கே போய்விட்டது போல தெரிந்தால் அங்கே கொஞ்சம் டூத் பேஸ்ட் தடவி விட்டால் சூப்பர் ஆகிவிடும். அது மட்டுமல்லாமல் டூத் பேஸ்ட் சுவற்றில் இருக்கும் பேனா, பென்சில் போன்றவற்றால் கிறுக்கிய கரைகளை கூட எளிதாக நீக்கும். கொஞ்சம் டூத் பேஸ்ட்டை கிறுக்கல்கள் மீது தடவி 5 நிமிடம் கழித்து ஈரத் துணியை வைத்து துடைத்தால், சுவற்றுக்கு பாதிப்பு இல்லாமல் குழந்தைகள் கிறுக்கிய கிறுக்கல்கள் நீங்கிவிடும். திடீரென சுவற்றில் ஆணி அடிக்க வேண்டுமென்றால் அந்த இடத்தில் ஒயிட் சிமெண்ட்க்கு பதிலாக டூத் பேஸ்ட் ஒட்டி விட்டால் போதும் அசிங்கமாக தெரியாது.

- Advertisement -

குறிப்பு 2:
வீட்டில் இருக்கும் செம்பு பாத்திரங்கள், செம்பு பொருட்கள் மீது விரைவாகவே கறுமை படர்ந்து கறுத்து விடும். செம்புப் பாத்திரங்களை பளபளன்னு புதியது போல பளிச்சிட செய்ய கொஞ்சம் டூத் பேஸ்ட் எல்லா இடங்களிலும் தடவி 5 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் தண்ணீர் தொட்டு லேசாக ஸ்கிரப்பர் பயன்படுத்தி தேய்த்து பாருங்கள், புத்தம் புதிதாக ஜொலிக்கும்.

குறிப்பு 3:
பொதுவாக கண்ணாடியில் இருக்கும் நீண்ட நாள் அழுக்குகள், கறைகள், ஸ்டிக்கர் பொட்டுகளால் உண்டாகக் கூடிய பசைகள் ஆகியவற்றை நீக்க விபூதி பயன்படுத்துவது உண்டு. விபூதி போட்டு நியூஸ் பேப்பரால் அழுத்தித் துடைத்தால் அவை எளிதாக நீங்கும். ஆனால் அதை விட நீங்கள் இந்த பற் பசையை கொஞ்சம் எல்லா இடங்களிலும் ஈரம் இல்லாமல் தடவி லேசாக ஈரப்பதத்துடன் இருக்க கூடிய துணியை வைத்து அழுத்தி துடைத்து பாருங்கள், ஒரு கரையும் இல்லாமல் வாங்கிய புதிதில் எப்படி உங்களுடைய கண்ணாடி இருந்ததோ அதே போல இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
அடுப்பங்கரையில் இருக்கும் சிங் குழாய் முதல் குளியலறைக்கு பயன்படுத்தும் சில்வர் குழாய்கள் மீது வரை உப்பு கறைகள் எளிதாக படிந்து விடுவது உண்டு. இத்தகைய கறைகளை எளிதாக போக்குவதற்கு கொஞ்சம் டூத் பேஸ்டை எல்லா இடங்களிலும் தடவி 10 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு இரும்பு நார் கொண்டு லேசாகத் தேய்த்தால் போதும் எல்லாப் உப்பு கரையும் நொடியில் காணாமல் போய்விடும்.

குறிப்பு 5:
பிரிட்ஜில் இருக்கும் உள் பாகங்கள் சுத்தம் செய்வதற்கு இந்த டூத் பேஸ்ட் ரொம்பவே உபயோகமாக இருக்கும். டூத் பேஸ்டில் இருக்கும் நறுமணம் ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்கும் என்பதால் ஒவ்வொரு ட்ரேக்களையும் தனித்தனியாக எடுத்து டூத்பேஸ்ட் பயன்படுத்தி சாஃப்ட் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து கழுவினால் எல்லா கரையும் நொடியில் போய்விடும். அது மட்டுமல்லாமல் பிரிட்ஜ் திறக்கும் பொழுது கிரிப்பாக இருக்க ரப்பர் ஒன்று கொடுத்து இருப்பார்கள். இந்த ரப்பரில் சேர்ந்துள்ள அழுக்குகளை எளிதாக நீக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம்.

- Advertisement -