அட! பத்து ரூபா பேஸ்ட்டை வெச்சி இவ்வளவு விஷயங்களை செய்யலாமா? இது தெரியாம ஒவ்வொன்னத்துக்கும் இவ்வளவு காசு செலவு பண்ணிட்டோமே.

- Advertisement -

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்களின் அதிகப்படியான பயன்களை பற்றி நாம் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். இந்தப் பதிவில் அப்படி ஒரு பொருளை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். அது வேறொன்றும் இல்லை டூத் பேஸ்ட் தான். இது வரைக்கும் டூத் பேஸ்ட்டை பல் துலக்க மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்று நினைத்திருப்போம். ஆனால் டூத் பேஸ்ட்டை வைத்து நம் அன்றாட வாழ்வில் எத்தனை வேலைகளை சுலபமாக செய்து கொள்ள முடியும் என்பதை தான் இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக எல்லோர் வீட்டிலும் சுவிட்ச் பாக்ஸ் கீழே நம் கை பட்டு அந்த சுவர் முழுவதும் கறையாகவே இருக்கும். அதை சுத்தம் செய்ய ஒரு பிரஷில் கொஞ்சமாக பேஸ்ட் எடுத்து அந்த இடத்தில் தேய்த்த பிறகு ஈரத் துணியை வைத்து துடைத்துப் பாருங்கள். நம்ம கை பட்டு கறையான அந்த தடமே தெரியாது.

- Advertisement -

அதே போல் சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் சுவரெல்லாம் மார்க்கர், ஸ்கெட்ச் பேன் போன்றவற்றை வைத்து கிறுக்கி வைத்து விடுவார்கள். அதை சுத்தம் செய்வதும் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதற்கும் இதே முறையை பயன்படுத்தலாம்.

நாம் அடுப்பு பற்ற வைக்க பயன்படுத்தும் லைட்டர் அதிகமாக எண்ணெய் பிசுப்புடன் இருக்கும். அதை தண்ணீர் ஊற்றி துடைத்தால் லைட்டர் எரியாது. அதற்கும் இதே போல் பிரஷில் கொஞ்சம் பேஸ்ட் வைத்து அதை லைட்டர் முழுவதும் தேய்த்து ஒரு ஈர துணி வைத்து துடைத்து பாருங்கள். புதிதாக வாங்கும் லைட்டர் போல மாறி விடும்.

- Advertisement -

முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த பேஸ்ட் வைத்து துடைத்து பாருங்கள் அவ்வளவு பளிச் சென்று மாறி விடும். அதுமட்டுமின்றி எல்லோர் வீட்டு பிரிட்ஜிலும் பிரிட்ஜின் கதவின் இடுக்கில் இருக்கும் பெல்டில் அதிகப்படியான அழுக்கு இருக்கும். இதை கை வைத்தும் துடைக்க முடியாது. அந்த இடத்திலும் இதே போல் பிரஷில் பேஸ்ட் வைத்து நன்றாக தேய்த்த பிறகு ஒரு துணி வைத்து துடைத்து பாருங்கள் அழுக்கு முழுவதும் வந்து விடும்.

பாத்ரூம் பைப்பில் உப்புத் தண்ணீர் பட்டு எப்பொழுதுமே அந்த பைப்புகள், சிங்க் போன்றவை கறையாகவே இருக்கும். இந்த கறையை சுத்தம் செய்யக்கூட இதே போல கொஞ்சமாக பேஸ்ட்டை தேய்த்து 5 நிமிடம் அப்படியே விட்டு அதன் பிறகு துடைத்தால் பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

இதே போல வெள்ளி கொலுசு பூஜை பொருட்கள் போன்றவற்றையும் இந்த பேஸ்ட் வைத்து சுத்தப்படுத்தலாம். இந்த இரண்டு முறைக்கு மட்டும் வெள்ளை நிற பேஸ்ட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெறும் அரை மணி நேரத்தில் கடைகளில் கிடைப்பது போல கெட்டியான கிரீமீ தயிரை ரெடி பண்ணலாம். கேட்டகவே ஆச்சர்யமா இருக்கு இல்ல. எது எப்படின்னு தெரிஞ்ச இன்னும் ஆச்சர்யபடுவீங்க.

வீட்டில் கதவு மரப்பலகை போன்றவற்றில் எல்லாம் நெயில் பாலிஷ் போன்ற விடாப் பிடியான கறைகள் பிடித்து விட்டால் கூட அந்த இடத்தில் கொஞ்சமாக பேஸ்ட் தடவி தேய்த்து பாருங்க அந்த கறைகளும் கூட நீங்கி விடும். இந்தப் பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றின நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -