எந்த 3 ராசிக்காரர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள் தெரியுமா? கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான்!

angry-astro

கோபம் எனும் வார்த்தை இயல்பாக இருந்தாலும் அது எந்த அளவிற்கு நம்மிடம் இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் நம்முடைய நட்பு வட்டம் விரியும். அதிகம் கோபப் படுபவர்களுக்கு அவ்வளவாக நட்புகள் இருக்காது என்கிறது ஜோதிடம். இருக்கும் ஒரு சில நண்பர்களும் சிறுவயது நண்பர்களாக இருப்பார்களாம். இந்த வரிசையில் 12 ராசிகளில் இந்த 3 ராசிக்காரர்கள் அதிகம் முன் கோபம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யாரெல்லாம்? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

angry-men

மேஷம்:
mesham-rasi1
மேஷ ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி கோபம் கொள்ள மாட்டார்கள். எனினும் கோபம் வந்துவிட்டால் இவர்களை அடக்குவதற்கு யாராலும் முடியாது. முன்கோபம் என்பது இவர்களுடைய பலவீனமாக அமைந்திருக்கும். இவர்கள் கோபப்படும் நபர்கள் இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக மட்டுமே இருக்க முடியும். எல்லோரிடமும் இவர்கள் கோபப்படுவது இல்லை. தங்களுக்கு பிடித்த அவர்கள் தங்களுடைய உரிமை உள்ளவர்களை மட்டுமே சட்டென யோசிக்காமல் பேசி விடுவார்கள். அதன் பிறகு அய்யோ இப்படி பேசி விட்டோமே என்ற வருத்தம் கொள்ளவும் செய்வார்கள். பேசிய வார்த்தைகள் மீண்டும் எடுக்க முடியாது என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களுடன் பயணிக்கும் நபர்களுக்கு இன்னும் உங்கள் மீது அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

கடகம்:
kadagam-rasi
கடக ராசிக்காரர்கள் முன்கோபம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். யார் எவர் என்றெல்லாம் இவர்கள் பார்ப்பதில்லை. கோபம் என்ற ஒன்று வந்துவிட்டால் சட்டென வார்த்தைகளை அள்ளி வீசி விடுவார்கள். பேசிய பிறகு யோசிக்கும் மனப்பக்குவம் கூட இவர்களிடம் இருக்காது. பிடித்தவர்களிடம் கோபப்படும் பொழுது அவர்களை சிறிது நேரம் கழித்து இவர்களே சமாதானப் படுத்தி விடுவார்கள். ஆனால் பிடிக்காதவர்களாக இருந்தால் என்ன செய்தாலும் அவர்களிடம் திரும்ப பேச மாட்டார்கள். இவர்கள்வம்பு சண்டைக்கு செல்வதில்லை வந்த சண்டையை விடுவதில்லை. இவர்களுடைய கோபம் மிகக் குறைந்த நேரத்திற்குள் சரியாகிவிடும். இதனை புரிந்து கொண்டவர்கள் மட்டுமே இவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியும். அதிகம் அன்பு கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் பலருடைய விருப்பமானவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்மம்:
simmam-rasi
சிம்ம ராசிக்காரர்களும் தங்களுடைய கோபத்தை குறைத்துக் கொண்டால் நல்லது என்று தங்களுக்கே புரிந்து இருக்கும் ஆனாலும் அதனை அவர்கள் மாற்றிக் கொள்ளவே முடியாத ஒரு விஷயமாக அமைந்துவிடும். கோபம் என்பது ஒரு மனிதனை எந்த அளவிற்கு மாற்றும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். எத்தனையோ கோபம் இருந்தாலும் அதனை அந்த சமயத்தில் அவர்கள் வெளி படுத்தி விடுவார்கள். மனதிற்குள் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு தேவையான சமயத்தில் பயன்படுத்த மாட்டார்கள். சரி எது தவறு எது என்றெல்லாம் இவர்கள் அடுத்த கட்டத்தில் தான் யோசிப்பார்கள். கோபம் வந்துவிட்டால் நெருப்பைப் போல உமிழ்ந்து விடுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள். இவர்களுக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.