உங்கள் நட்சத்திரத்திற்குரிய இந்த மரங்களை வளர்த்தால், அதன் பசுமை உங்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் தெரியுமா?

tree-astro

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விருட்சம் நன்மைகளை செய்யும் என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் அந்தந்த மரங்களை அவர்கள் கைகளால் நட்டு வளர்த்தால் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும். இதுவரை எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தாலும் இந்த மரம் வளர்த்தால் கண்டிப்பாக வியக்க வைக்கும் மாற்றங்கள் பல உண்டாவதை நீங்களே கண் கூடாக பார்க்கலாம்.

tree

விருட்சங்கள் இல்லாத கோயில்களே இல்லை அல்லவா? விருட்சங்கள் இறைவனுக்கு விருப்பமானவை. உயிர்களுக்கு பிராணத்தை தரக்கூடியவை. மரம் இல்லையென்றால் எப்படி மனிதனால் வாழ முடியும்? மரம் நம் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பவை. இன்றியமையாதவை என்று கூட சொல்லலாம். நட்சத்திரங்கள் நமக்கு செய்யக்கூடிய நன்மைகளை நட்சத்திர பாதங்கள் பலவீனம் அடையும் போது தடுக்கும். அதன் தாக்கத்தை இந்த மரங்கள் அந்த நட்சத்திரக்காரர்களுக்கு பாதிக்காமல் பாதுகாக்கும்.

வேதங்கள் வேம்பாக மாறிய கதைகளும் உண்டு. தோஷங்களுக்கு மரத்தை வெட்டும் சாஸ்திரங்களும் உண்டு. தல விருட்சம் தரும் பயன்களும் நமக்கு தெரியும். இவ்வாறாக விருட்சத்தின் சிறப்புகளை மென்மேலும் அடுக்கி கொண்டே போகலாம். எந்த விருட்சம் உங்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

vepilai-tree

27 நட்சத்திரங்களும் அதன் ராசி மரங்களும்:

- Advertisement -

1. அஸ்வினி – எட்டி மரம்
2. பரணி – நெல்லிக்காய் மரம்
3. கார்த்திகை – அத்தி மரம்
4. ரோகிணி – நாவல்பழ மரம்
5. மிருகசீரிஷம் – கருங்காலி மரம்
6. திருவாதிரை – செங்கருங்காலி மரம்
7. புனர்பூசம் – மூங்கில் மரம்
8. பூசம் – அரசமரம்
9. ஆயில்யம் – புன்னைமரம்
10. மகம் – ஆலமரம்
11. பூரம் – பலாமரம்
12. உத்திரம் – அலரி மரம்
13. ஹஸ்தம் – அத்தி அல்லது வேல மரம்
14. சித்திரை – வில்வமரம்
15. சுவாதி – மருத மரம்
16. விசாகம் – விளாமரம்
17. அனுஷம் – மகிழமரம்
18. கேட்டை – பிராயன் மரம்
19. மூலம் – மாமரம்
20. பூராடம் – வஞ்சி மரம்
21. உத்திராடம் – பலாமரம்
22. திருவோணம் – எருக்கு மரம்
23. அவிட்டம் – வன்னி மரம்
24. சதயம் – கடம்பு மரம்
25. பூராட்டாதி – தேமா மரம்
26. உத்திரட்டாதி – வேப்பிலை மரம்
27. ரேவதி – இலுப்பை மரம்

சாதாரணமாகவே மரம் வளர்ப்பது நல்ல காரியம் தான். மக்களிடம் மரங்கள் நடுவதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மரங்கள் இல்லையென்றால் மழையும் இல்லை. பருவ நிலை மாற்றங்களினால் நம்முடைய நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் சந்தித்து வருகிறோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நாட்டிற்காகவும், உங்களுக்காகவும் மரங்கள் வளர்த்து வாருங்கள்.

munivar

பொதுவாக ரிஷிகளும், முனிவர்களும் மரத்தின் அடியில் தான் தவம் செய்வார்கள். ஏனெனில் மரத்திற்கு விசேச சக்திகள் உண்டு. மனிதர்களுக்கு உகந்த மரங்கள் இருப்பது போல் இறைவனுக்கும் தனி தனியாக இருக்கிறது. ஈசனின் அருள் பெற அவருக்கு உகந்த புன்னை, வில்வ மரங்களுக்கு அடியில் தவம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அது போல் ஒவ்வொரு கடவுளுக்கும் உண்டு. ரிஷிகள் பலரும் இந்த யுக்தியை கையாண்டு எளிதில் வரங்களை பெற்றுள்ளனர்.

அனைவரும் அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய மரங்களை இன்றே நட்டு, வளர்த்து வாருங்கள். அதன் அளப்பரிய பயன்களை அடைந்து பலன் பெறுங்கள். உங்களது மரம் எவ்வளவு பசுமையாக வளர்கிறதோ அவ்வளவு நன்மைகள் உங்களை வந்தடையும் என்கிறது சாஸ்திரம்.

இதையும் படிக்கலாமே
எந்த ராசிக்காரர்கள் எந்த மரத்தை நட்டு, வளர்த்து வந்தால் ராஜயோகத்தை பெறலாம்?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth star trees benefits in Tamil. 27 stars and trees in Tamil. Natchathiram tree in Tamil. Nakshatra tree astrology in Tamil. 27 natchathira marangal.