எந்த ராசிக்காரர்கள் எந்த மரத்தை நட்டு, வளர்த்து வந்தால் ராஜயோகத்தை பெறலாம்?

tree-rasi

நாம் செய்யும் எந்த ஒரு ஆன்மீக பரிகாரமாக இருந்தாலும் அதற்கான பலன் ஒரு குறிப்பிட்ட காலம் தான். பலனை தொடர்ந்து அடைய வேண்டும் என்றால் பரிகாரங்களை தொடர்ச்சியாக இத்தனை நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது இத்தனை மாதத்திற்கு ஒரு முறையோ செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ஆனால் ஒரு மனிதன், ஒரு மரத்தை நட்டு வளர்ப்பது என்பது இந்த பட்டியலில் சேராது. தன் கையால், ஒரு மரத்தை நட்டு, பராமரித்து, அது வளர்ந்து செடியாகி, மரமாகி, பூ பூத்து, காய்த்து, கனியாகும். இது தவிர மரத்தை வளர்ப்பதன் மூலம் இயற்கைக்கு ஒரு பெரிய உதவியை நாம் செய்கின்றோம். இப்படி இருக்க அந்தந்த ராசிக்காரர்கள், அவர்களுக்கு பொருத்தமான மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலம் எப்பேர்பட்ட பலனை அடைய முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். சாதாரணமாக எந்த மரத்தை வளர்த்தாலும் அது நல்ல பலனைத் தரும். உங்கள் ராசிக்கு எந்த மரத்தை நட்டு வளர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வளர்த்தால், கேட்கவா வேண்டும்? நிச்சயமாக அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் தான். உங்கள் ராசிக்கு எந்த மரத்தை நடவேண்டும் என்று தெரிந்துகொண்டு, அந்த மரத்தினை நட்டு பராமரித்து வளர்த்து, அதிர்ஷ்டக் காற்றை உங்கள் பக்கம் வீச வையுங்கள்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் நெல்லிக்காய் மரம் வளர்ப்பது நல்ல பலனைத் தரும். இதை உங்கள் வீட்டிலும் வைத்து வளர்க்கலாம் அல்லது கோவிலில் வைக்க முடிந்தால் வைத்து வளர்ப்பதும் நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் நாவல் மரம் வளர்ப்பது நல்ல பலனைத் தரும். நாவல் மரத்தை உங்களது வீட்டில் வைத்து பராமரித்து வளர்ப்பது நல்ல பலனைத் தரும். முடியாதவர்கள் தெருவோரங்களில் சாலையோரங்களில் வைப்பதும் நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மூங்கில் மரத்தை உங்கள் வீடுகளில் வைத்து வளர்க்கலாம். அதாவது தொட்டியில் அழகுக்காக வைக்கப்படும் மூங்கில் செடியை தான் வீட்டில் வைத்து வளர்க்க முடியும். உங்களுக்கு சொந்தமாக இடம், தோட்டம் இப்படி இருந்தால் அந்த இடங்களில் மூங்கிலை வைத்து வளர்ப்பது நல்லது. மூங்கில் மரத்தை கோவிலில் வைக்க மாட்டார்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் அரச மரம் வைத்து பராமரித்து அதை பெரிய விருட்சமாக வளர வைப்பது நல்ல பலனைத் தரும். சிறிய அரசமர கிளையை நட்டு பராமரித்து அது ஒரு பெரிய விருட்சமாக வளர்ந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் நாகப்பூ மரத்தை வளர்ப்பது நல்ல பலனைத் தரும். புத்து இருக்கும் கோவில், சிவன் கோவில் இந்த இடங்களில் நாகப்பூ செடியை நட்டு பராமரிப்பது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் பூந்திக்கொட்டை மரத்தை உங்களது வீட்டிலோ அல்லது ரோட்டோரத்தில் வளர்ப்பது நல்ல பலனை தரும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் சிவன்கோவிலில் வில்வ மரம் வைப்பது நல்ல பலனைத் தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் மருத மரம் வளர்ப்பது நல்ல பலனை தரும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் மகிழ மரம் வளர்ப்பது நல்ல பலனைத் தரும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் தேக்கு மரத்தை வளர்ப்பது நல்ல பலனைத் தரும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் வெள்ளெருக்கன் செடியை வளர்ப்பது நல்ல பலன் தரும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்கள் மா மரம் வளர்ப்பது நல்ல பலனைத் தரும்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த மரங்களையும், செடிகளையும் உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டில் நட்டு பராமரித்து வளர்க்கலாம். முடியாதவர்கள் கோவில்களில் அனுமதி பெற்று அங்கு இந்த செடிகளை நடலாம். அதுவும் முடியாதவர்கள் சாலையோரங்களிலோ,  தெரு ஓரங்களிலோ உங்களால் முடிந்த செடிகளை நடுவது நல்ல பலன் தரும். இத்தனை செடிகள் தான் நடவேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை. இந்த  மரங்களை வளர்ப்பதால் உங்களுக்கு மட்டும் நல்லதல்ல. இந்த நாட்டிற்கும் நல்லது என்பதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே
கஷ்டங்கள் தீர 12 ராசிக்குமான இரண்டே வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ரகசிய வழிகள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have 12 rasi trees in Tamil. Virutcham rasi palan. Rasi maram in Tamil. Rasi maram. Trees for 12 rashi. Trees for 12 rashi.