சித்தர் அருளால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அதிசய மனிதர் – வீடியோ

Kannan yoga master

இந்த பூமியும் இந்த பிரபஞ்சமும் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் கொண்டது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தினமும், ஏன் ஒவ்வொரு நொடியும், அது பல விதமான ஆச்சர்யங்களை வெளிப்படுத்துவதைக் கண்டு நாம் வியப்பில் ஆள்கிறோம். ஆனால் அப்பிரபஞ்சத்தை விட ஒவ்வொரு மனிதனின் உடலே ஒரு அதிசயமான படைப்பு என்றும், அதை “தியானம், யோகம்” போன்ற கலைகளின் மூலம் முறையாக பயன்படுத்த தெரிந்தவர்கள், இறைவனாகவே ஆகலாம் என்பது சித்தர்களின் வாக்காகும். அந்த வகையில் சித்தர்களின் யோகக்கலையில் ஒன்றான “முத்திரை பயிற்சி முறையைக்” கொண்டு, நிகழ்த்தப்படும் அதிசயங்களை இந்த வீடியோவில் பார்ப்போம்.

திருச்சி அருகே வசிக்கும் அரசு ஊழியரும், யோகப் பயிற்சியாளருமான ஒருவர், தன்னிடம் உடல் சம்பந்தமான குறைபாடுகளோடு வருபவர்களை, தான் கற்பிக்கும் முத்திரை பயிற்சியின் மூலம், அவர்களின் நோய்களையும் அவர்களின் கர்ம வினைகளையும், சித்தர்களின் ஆசியுடன் நீக்குவதாக கூறுகிறார்.

இதற்கு முன்பு தானே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது, தனக்கு வந்த ஒரு கனவில் “பாவ நாராயண மகரிஷி” என்கிற மகான், தனக்கு இம்முத்திரை பயிற்சியை கற்றுத்தந்தாகவும், அதை முறையாக பயிற்சி செய்து தான் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக கூறுகிறார். அதன்பிறகு அந்த சித்தர்களின் ஆசியோடு, தான் பிறரின் நோய்களையும், கர்ம வினைகளையும் தீர்ப்பதற்கு இந்த முத்திரை பயிற்சியை பிறருக்கு கற்று தருவதாக கூறுகிறார்.

மேலும் தாம் கற்றுத்தரும் இந்த முத்திரை பயிற்சி முறையில், சில குறிப்பிட்ட முத்திரைகளைக் செய்து, தியானம் செய்வதால் ஒருவருடைய நோய்களும், கர்ம வினைகளையும் தீர்க்க முடியும் என்றும், தங்கள் கர்ம வினைகள் அவர்களின் உடல் மற்றும் மனதிலிருந்து நீங்கும் போது, ஒவ்வொருவரின் உடலிலிருந்து ஒவ்வொரு வகையான நறுமணம் வீசும் என இவர் கூறுகிறார். அதுமட்டுமல்லாது இங்கு முத்திரைப் பயிற்சியை மேற்கொண்ட சிலர், அப்பயிற்சியின் போது தங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட வித்யாசமான அனுபவத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.