உங்கள் வீட்டு சமையலறையில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில், இப்படியா சமையல் செய்வீங்க! இனிமே இந்தத் தவறை செய்யாதீங்க!

cook-lakshmi
- Advertisement -

பொதுவாகவே வாரம்தோறும் வரும் செவ்வாய் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும் சில விஷயங்களை நம் வீட்டில் செய்யக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். உதாரணமாக பூஜை பாத்திரங்களை வெள்ளிச் செவ்வாயில் துலக்கக் கூடாது. வீட்டை அலமாரிகளை சுத்தம் செய்யக் கூடாது. ஒட்டடை அடிக்கக் கூடாது. முடி வெட்ட கூடாது. நகம் வெட்ட கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு சமையலறையில் இதையும் சமைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

cook1

இது சில பேருக்கு தெரியும். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் தெரியாதவர்களாக இருந்தால் இந்த பதிவினை படித்து செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சமையலறையில் சமைக்கக்கூடாது அந்தப் பொருள் என்ன என்பதையும், சமைக்க வேண்டிய அந்த பொருள் என்ன என்பதைப் பற்றியும், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

செவ்வாய், வெள்ளி என்றாலே மங்கலகரமான தினம். அதாவது மகாலட்சுமிக்கு உரிய தினம் என்றே சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரியதான துவரம்பருப்பை, இந்த இரு தினங்களிலும் கட்டாயமாக சமைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கடலைப்பருப்பு போட்ட கூட்டு, அப்படி இல்லை என்றால் பாசிப்பருப்பு சேர்த்த சாம்பார் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும்.

thuvaram-paruppu

பருப்பு வகை என்பது மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது. அதிகமாக உப்பு, புளி, காரம் சேர்த்த வத்தக்குழம்பு காரக்குழம்பு இவைகளை வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வைப்பதை தவிர்த்து கொள்வது மிக மிக நல்லது. இதோடு சேர்த்து சிறிதளவு பருப்பு சாதத்துடன் நெய் சேர்த்த உணவை வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் ஆரோக்கியம் சீர்படும். ஆன்மீக ரீதியாக மகாலட்சுமிக்கு உகந்த நெய்யையும் பருப்பையும் நம்முடைய வீட்டில் சமைத்தால் லட்சுமி கடாட்சமும் ஏற்படும்.

- Advertisement -

சாம்பார் வைக்கிறீர்களோ இல்லையோ? முடிந்தவரை துவரம்பருப்பை வேக வைத்து, அந்த பருப்பில் நெய் ஊற்றி சாப்பிடும் பழக்கத்தை மட்டுமாவது வைத்துக்கொள்ளுங்கள். புதிய வீடு குடி பொகும் போது கூட, இந்த துவரம்பருப்பிர்க்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம் முன்னோர்கள் கடைபிடித்த சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று.

ghee

இது இன்றோ நேற்றோ வந்த பழக்கம் அல்ல. நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வந்த பழக்கம்தான். உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா, பாட்டிமார்களை கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கே தெரிந்திருக்கும். சிலருக்கு இதில் நம்பிக்கை இல்லாமல் போனதால், எந்த நாளில் என்ன சமைத்தால் என்ன! என்று சொல்லி தங்களுடைய பழக்கங்களை தங்களுக்கு தகுந்தவாறு மாற்றி வைத்துக் கொண்டனர்.

- Advertisement -

உங்களது வீட்டில் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் பருப்பு சேர்த்த சாப்பாட்டை சமைத்து வரும் பழக்கத்தை கொண்டு வந்து பாருங்கள். சில நாட்களிலேயே ஏற்படும் மாற்றத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற பெரிய பெரிய பூஜைகள் தான் செய்ய வேண்டும். தங்கத்தால் தான் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் லட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மேல் விழும் என்பதெல்லாம் இல்லை. இப்படிப்பட்ட சின்ன சின்ன தவறுகளை மாற்றிக்கொண்டு வீட்டிலிருக்கும் பெண்கள் மகாலட்சுமி அழைத்தாலே போதும். நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
நாளை சித்திரை அமாவாசை! இந்த முறைப்படி கண் திருஷ்டியை கழித்தால் உங்களுக்கு இருக்கும் அனைத்து கஷ்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Samayal seiyum muraigal. Samayal in Tamil. Sevvai kilamai Tamil. Velli kilamai. Samayal muraigal in Tamil.

- Advertisement -