நாளை சித்திரை அமாவாசை! இந்த முறைப்படி கண் திருஷ்டியை கழித்தால் உங்களுக்கு இருக்கும் அனைத்து கஷ்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

amavasai-lemon

பொதுவாகவே இந்த அமாவாசை நாள் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கும், குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கும் ஒரு சிறந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சித்திரை அமாவாசை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருநாள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்த நாளில் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமையை மறக்காமல், அவரவர் வீட்டு முறைப்படி செய்துவிட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை நமக்கு நிலவி வந்தாலும், பச்சரிசி சாதம் வடித்து அதில் கொஞ்சம் எல்லை கலந்து முதலில் காகத்திற்கு சாப்பாடு வைத்து, அதன் பின்பு நாம் சாப்பிடுவது தான் முறை. நம்முடைய முறைப்படி சாஸ்திர சம்பிரதாயங்களோடு முன்னோருக்கு செய்யும் கடமையை இந்த அமாவாசை செய்ய முடியவில்லை என்றாலும் காகத்திற்கு சாதம் வைக்க மறந்து விடாதீர்கள்.

Thirusti

இதே போல் நமக்கு இருக்கும் கண் திருஷ்டியை கழிக்க வேண்டும் என்றாலும், இந்த அமாவாசை தினத்தில் திருஷ்டி சுத்தி போட்டால் அதற்கான பலன் அதிகமாகவே இருக்கும் என்பதும் நம் முன்னோர்களின் கூற்று. இந்த அமாவாசை தினத்தில் கண் திருஷ்டியை முழுமையாக கழிப்பதற்காக ஒரு முறை நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் உங்களது வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு முகம் பார்த்தவாறு அமர வைத்து, ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சை பழம் இரண்டு துண்டுகளாக பிரியக் கூடாது. முக்கால் பாகம் வெட்டி கொண்டால் போதும். அதன் இடையே 3 மிளகை வைத்து, முதலில் யார் திருஷ்டி சுத்தப் போகிறார்களோ, அவர்களுடைய தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

elumichai lemon

அதன் பின்பு உங்களது குடும்ப உறுப்பினருக்கு வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றிவிட்டு, உங்களது வீட்டிற்கு வெளியே சென்று உங்கள் வீட்டையும் மூன்று முறை வலமிருந்து இடமாக சுற்றி, முடிந்தால் முச்சந்தியில் எடுத்துக் கொண்டுபோய் போட்டு விட்டு வரலாம். முடியாதவர்கள் உங்கள் வீட்டு வாசலிலேயே ஒருபக்கம் ஓரமாக போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த முறையில் அமாவாசை தினத்தில் திருஷ்டி கழிப்பதன் மூலம், உங்கள் வீட்டின் மேல் உள்ள திருஷ்டியும் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் மேல் உள்ள திருஷ்டியும் முழுமையாக நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

amavasai1

இறுதியாக ஒரு குறிப்பு. தயவுசெய்து அமாவாசை தினத்தில் காலை எழுந்த உடனேயே குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். சில பேருக்கும் குளிக்காமல் தேனீர், காஃபி, அருந்தும் பழக்கம் இருந்தால் கூட அன்றைய ஒரே ஒரு நாளாவது குளிப்பதற்கு முன்பு, பச்சைத் தண்ணீர் கூட பல்லில் படாமல் இருப்பது மிகவும் புண்ணியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
பணத்தை ஈர்க்கும், பச்சை கற்பூர திலகத்தை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti neenga pariharam in Tamil. Amavasai pariharangal Tamil. Chithirai amavasai. Amavasai andru seiya vendiyavai. Kan thirusti neenga in Tamil.