- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் இந்த தக்காளி கார சட்னியை இந்த பக்குவத்தில் செய்து வைத்துக்கொண்டால், இரண்டு...

நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் இந்த தக்காளி கார சட்னியை இந்த பக்குவத்தில் செய்து வைத்துக்கொண்டால், இரண்டு நாட்களுக்குக் கூட கெட்டுப்போகாமல் அதே சுவையுடன் அப்படியே இருக்கும்

- Advertisement -

வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் அல்லது வீட்டில் உள்ள பெண்மணிகள் எங்காவது வெளியில் சென்று ஒரு நாள் கழித்து வருவதாக இருந்தாலும், இரண்டு நாட்களுக்கு வைத்து சாப்பிடும் அளவிற்கு கெட்டுப்போகாத உணவினை செய்து வைத்து கொண்டால் போதும். அவற்றை பயணம் செய்யும் பொழுதும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது வீட்டில் உள்ளவர்கள் இட்லி, தோசை செய்து கொண்டு, அதனுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். இவ்வாறு சுவைமிக்க இந்த தக்காளி கார சட்னியை எப்படி இரண்டு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பக்குவமான முறையில் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து செய்வதால் இதன் வாசனையும், சுவையும் மணக்க மணக்க அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி – 6, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி சிறிய துண்டு – 2, பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு – ஒன்றரை ஸ்பூன், காஷ்மீரி சில்லி பவுடர் – அரை ஸ்பூன், நல்லெண்ணெய் – 100 கிராம், கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன், வர மிளகாய் – 3.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள தக்காளி வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு இவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சி, புளி மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். பிறகு இவை அனைத்தையும் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து 150 கிராம் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மூன்று ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கொத்தமல்லி தழை தூவி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இவை 15 நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும். இந்த நேரத்தில் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். இவை நன்றாக கொதித்து இவற்றில் சேர்த்துள்ள எண்ணெய் பிரிந்து மேலே வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் தக்காளி காரசட்னி தயாராகிவிட்டது. இதனை இரண்டு நாட்களுக்கும் வைத்து சாப்பிடலாம். மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.

சற்று முன்