அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் வருவலை இப்படி இரண்டு விதமாக வீட்டில் உள்ளவர்களுக்கு வறுத்து கொடுக்கலாம். வேண்டாம் என்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்

fish
- Advertisement -

மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் இரத்த வாடையினால் சாப்பிடுவதற்கு பிடிக்காது. அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மசாலா சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் அந்த வாசனை எதுவும் இல்லாமல் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி சுவையான இரண்டு விதமான மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fish

மீன் வருவல்: 1
அரை கிலோ மீனை நன்றாக சுத்தம் செய்து தேவைக்கேற்ற அளவில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் ஒரு வெங்காயம், 2 தக்காளி, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, சிறிய துண்டு இஞ்சி, 3 பல் பூண்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

fish

பின்னர் ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு, புளி தண்ணீர், அரை ஸ்பூன் அரிசி மாவு, அரை ஸ்பூன் சோள மாவு இவை அனைத்தையும் மீனுடன் ஒன்றாக சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்னர் அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒவ்வொரு மீன் துண்டையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக பொறித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மீன் வறுவல் தயாராகிவிட்டது. இதில் மேலும் இரத்த வாடை எதுவும் வராமல் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

- Advertisement -

மீன் வருவல்: 2
முதலில் அரை கிலோ மீனை நன்றாக சுத்தம் செய்து பக்குவமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து புளி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் இந்த புளித்தண்ணீரை மீனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

fish-fry

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக தோசைக்கல்லில் சேர்த்து இரண்டு புறங்களிலும் நன்றாக சிவந்து வருமாறு வறுத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -