பித்ரு சாபம் முதல் பெண் சாபம் வரை எந்த சாபத்திற்கு என்ன காரணம் தெரியுமா ?

Sabam-1

நாம் சிறுவயதில் படித்த இதிகாசங்களிலும், புராணங்களிலும் ரிஷிகளும், கடவுளர்களும் பிறருக்கு சாபம் அளிப்பதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். சாபங்கள் பெரும்பாலனோர் நினைப்பது போல் சாதாரணமாக தோன்றினாலும், ஒருவரது வாழ்வில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துபவை. சாபங்கள் எத்தனை வகையாக அது எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

pithru

பித்ரு சாபம்

நம்மை பெற்று வளர்த்த பெற்றோர்கள் மற்றும் நமது தாத்தா பாட்டி போன்ற முன்னோர்களை அவமதித்தல்,அவர்கள் வாழும் காலத்தில் அவர்களை முறையாக கவனிக்காமலிருத்தல் போன்றவற்றால் நமக்கு பித்ரு சாபம் ஏற்படுகிறது.

குரு சாபம்

நமக்கு கல்வி மற்றும் வித்தைகளை சொல்லித்தந்த ஆசிரியர் அல்லது குருவை அவமதித்தல், அவர் நமக்கு கற்றுத்தந்ததை அடுத்த தலைமுறைக்கு கற்று தராமல் இருத்தல், அவருக்கு துரோகம் புரிதல், குருவிற்கு அவருக்குரிய குரு தட்சிணை கொடுக்காமல் இருத்தல் போன்றவற்றால் குரு சாபம் ஏற்படுகிறது.

munivar

பெண் சாபம்

பெண்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துதல், உடன் பிறந்த சகோதரிகளுக்கு அவர்களுக்குரிய சொத்தின் பங்கை தராமல் மறுத்தல், காதலித்து அவர்களை திருமணம் செய்யாமல் ஏமாற்றுதல், புதிதாக திருமணமான பெண்களை அவர்களது கணவருடன் சேர விடாமல் தடுத்தல் போன்றவற்றால் பெண் சாபம் ஏற்படுகிறது.

- Advertisement -

நர சாபம்

சக மனிதர்களை துன்புறுத்துதல், அடித்தல், அவர்களுக்குரிய உரிமைகளை மறுத்தல், சரியான உணவோ அல்லது ஊதியமோ தராமல் இருத்தல் போன்ற பல காரணங்களால் நர சாபம் ஏற்படுகிறது.

annathanam

தெய்வங்கள் மற்றும் ரிஷிகளின் சாபம்

தெய்வங்களை அவமதித்தல், தெய்வபக்தி கொண்டவர்களை கேலி செய்தல் மற்றும் அவமதித்தல், துர்காரியங்களை செய்தல், தெய்வ சிலைகளை திருடுதல், ஞானமடைந்த சித்தர்கள் ஞானிகளை அவமதித்தல் போன்றவற்றால் தெய்வ மற்றும் ரிஷி சாபம் ஏற்படுகிறது.

நாக சாபம்

விஷமுள்ள அல்லது விஷமற்ற பாம்புகளாக இருந்தாலும் அனாவசியமாக அவற்றைக் கொல்வது நாக சாபத்தை ஏற்படுத்தும். இதனால் திருமணத் தடை, புத்திரப்பேறு தடை போன்றவை ஏற்படும்.

Snake egg

பிரதே சாபம்

இறந்தவர்களின் சடலங்களை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையிடுவது, சடலங்களை அவமதிப்பது, சடலத்தை இடுகாடு செல்ல விடாமல் தடுப்பது போன்றவை பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.

வருண சாபம்

தண்ணீருக்கு அதிபதியாக “வருண பகவான்” கருதப்படுகிறார். குடிநீரை வீணடிப்பது, ஏரி,குளம், நதிகளை மாசுபடுத்துவது, அந்த நீரில் மல ஜலம் கழிப்பது, பணத்திற்கு நீரை விற்பது, மழையை தூற்றுவது போன்றவை வருண பகவானின் சாபத்தை பெறும் செயல்கள் ஆகும்.

ஜந்து சாபம்

விலங்குளை அவசியமின்றி கொல்லுதல், அவற்றை துன்புறுத்துதல், பசுமாட்டினை துன்புறுத்துதல், அடித்தல் போன்றவை ஜந்து சாபம் மற்றும் கோ சாபத்தை ஏற்படுத்தும்.

cow

விருட்ச சாபம்

பச்சை மரங்களை அவசியமின்றி வெட்டுதல், அவற்றின் கிளைகளை நறுக்குதல், அவற்றிற்கு அசுத்தமான நீரை ஊற்றுதல், அவற்றின் மீது எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவை விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.

பூமி சாபம்

பிறரின் நிலத்தை அபகரித்தல், கோவில் நிலங்களை ஆக்கிரமித்தல், தேவையற்ற பள்ளங்களை தோண்டுதல், பூமிக்குள் அபாயகரமான அசுத்தங்களை புதைத்தல், அடிக்கடி பூமி அதிரும் படி நடத்தல் போன்றவை பூமி சாபத்தை ஏற்படுத்தும். மேற்கூறியவற்றில் எல்லாவற்றையும் நம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் செய்யாமல் தவிர்த்து இறைவனின் அருளைப் பெறுவோம்.

இதையும் படிக்கலாமே:
சென்னையில் உள்ளவரின் தீராத நோயை தீர்த்த அகத்திய சித்தர்

English Overview:
Here we described about different types of sabam in Tamil. Pithru sabam, Pen sabam like thais we have many sabam in Tamil.