வீட்டில் அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போவது, மனம் சோர்வாக இருப்பது போல உணர்வது போன்ற விஷயங்கள் எல்லோருக்கும் இருந்தால், வராகி அம்மனுக்கு இந்த தீபத்தை ஏற்றினால் விரைவாக நல்ல பலன் கிடைக்கும். சக்தி வாய்ந்த இந்த வராகி அம்மனுக்கு எப்படி தீபம் போட்டால் குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதாவது ஒரு உடல்நல கோளாறுகள் சில சமயங்களில் ஏற்படுவது உண்டு. சிறு சிறு கோளாறுகள் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அடிக்கடி நடக்கும் பொழுது மனம் விரக்தியில் மூழ்கும். அதுவும் நல்ல நாள், விசேஷம் வந்து விட்டால் போதும், யாராவது ஒருவர் செலவு வைத்து விடுவார்கள். குறிப்பாக குழந்தைகளை அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு அலைகின்ற மாதிரி இருக்கும். இது போன்ற சூழலில் வராகி அம்மனுக்கு இந்த தீபம் ஏற்றி வந்தால் பிரச்சனை தீரும்.
உடல்நலம் சீராக வராகி அம்மனுக்கு தீபம் ஏற்றும் முறை:
உடல் நலம் சீராகி வருவதற்கு அம்மனுக்கு வேண்டிக் கொண்டு நீங்கள் கருநீல துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதைச் செவ்வக வடிவில் 8 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கருநீல நிற துணியில் கொஞ்சம் வெண்கடுகை வையுங்கள். இதை மூட்டை போல கருப்பு நூல் கொண்டு இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெண்கடுகு வெளியில் வந்து விடக்கூடாது.
பின்னர் இதை புதிய அகல் விளக்கு ஒன்றில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, வராகி அம்மனுக்கு நேர்ந்து கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். சனிக்கிழமையில் மட்டும் இந்த தீபத்தை ஏற்றி மனதார அம்மனிடம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இனி நோய் குறை எதுவும் இல்லாமல் குடும்பத்தில் நிம்மதி தாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை வீட்டிலும் ஏற்றலாம்.
வராகி அம்மன் சன்னதிக்கு சென்று ஏற்றி வந்தால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையில் இந்த தீபம் ஏற்ற சிறந்த நேரம் ஆகும் அல்லது இரவு எட்டிலிருந்து ஒன்பது மணி வரை இந்த தீபத்தை ஏற்ற உகந்தது ஆகும். தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளில் இந்த தீபத்தை வராகி அம்மனுக்கு வேண்டி ஏற்றி வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தீராத கடன்களும், தீய சக்திகளும் கூட இந்த தீபத்தை ஏற்றி வருபவர்களுக்கு விலகி நிற்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாமே:
தீபாவளி அன்று பல்லியை பார்த்தால் என்ன பலன்
வெண்கடுகு திருஷ்டிகள் விலக தூபம் போட பயன்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான மூலிகை பொருளாகும். இந்த வெண்கடுகை கொண்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் பொழுது வராகி அம்மனுடைய அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். வேண்டிய வேண்டுதல் அப்படியே நடக்கும். அதில் வரும் புகை கெட்டவைகளை விலக்கும். எதிரிகள் தொல்லை இருந்தாலும் இந்த தீபத்தை ஏற்றி பலன் பெறலாம். நீங்களும் ஏற்றிப் பாருங்கள், அடிக்கடி உடல்நிலை சரியில்லாத பிரச்சனை தீர்ந்து, எல்லோரும் திடகாத்திரமான ஆரோக்கியமான நிலையை அடையலாம்.