- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉடல்வலி தீர பப்பாளி பரிகாரம்

உடல்வலி தீர பப்பாளி பரிகாரம்

- Advertisement -

சில நேரங்களில் நமக்கு நடப்பதெல்லாம் எதற்காக நடக்கிறது? என்றே நமக்கு தெரிவதில்லை. திடீரென மனம் வெம்பி அழுகும். நாம் எதற்கு இப்போது அழுகிறோம்? என்று நமக்கே புரியாது. அது போல திடீரென உடம்பில் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருக்கும். இனம் புரியாத இந்த வலியை நீக்க என்ன பரிகாரம் செய்யலாம்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

நாம் ஏதாவது அளவிற்கு அதிகமாக வேலை செய்யும் பொழுது, உடல் தன்னிலை மறந்து அதிகமாக சோர்வு காணும். இரவு நேரங்களில் சரியாக தூங்காமல் இருந்தாலும், உடலானது சோர்வு கொள்ளும். சிலருக்கு நோய் வாய் பட்டு இருப்பதால், உடலில் வலி இருக்கும். ஆனால் மேற்கூறிய எந்த காரணமும் இல்லாமல் உடலானது வலியை உணர்கிறது என்றால் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

வேலை செய்ய உட்கார்ந்தாலே உடல் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காது. இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். ஒரு பப்பாளி பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பப்பாளி பழம் உடலில் இருக்கக் கூடிய திருஷ்டிகளை கிரகித்து வெளியேற்றும் ஆற்றல் கொண்ட அற்புதமான ஆன்மீக சக்தி படைத்த ஒரு பழம் ஆகும். இந்த பப்பாளியை அடிக்கடி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.

பப்பாளி பழத்தை எடுத்து உங்களுடைய தலையை சுற்றி வலது புறமாக 27 முறை சுற்றுங்கள். 27 முறை பப்பாளியை வைத்து தலையை சுற்றியவுடன் அதை கொண்டு போய் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு தொழுவத்தில் இருக்கும் பசுவிற்கு தானம் கொடுங்கள். இந்த பரிகாரத்தை வெள்ளி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யலாம். தினமும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கல்லுப்பை போட்டு குளித்து வாருங்கள். இப்படி செய்வதாலும் உடலில் இருக்கும் சோர்வு நீங்கும்.

- Advertisement -

உடல் வலியை தீர்க்கக் கூடிய எளிய இந்த ஆன்மீக பரிகாரத்தை குழந்தைகளுக்கும் இப்படி செய்யலாம். திருஷ்டியால் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது என்று நினைத்தால் இதை செய்யுங்கள். பார்ப்போர் கண் ஒன்று போல இருக்காது. குழந்தைக்கு திருஷ்டி இருந்தால் அடிக்கடி அழுது கொண்டே இருக்கும். காரணம் இல்லாமல் அழுது கொண்டே இருக்கும். குழந்தைக்கு பப்பாளி மரத்தின் இலையை பறித்து வந்து நன்கு சுத்தம் செய்துவிட்டு பின்னர் நெற்றி மற்றும் வயிற்றுப் பகுதியில் ஒவ்வொரு இலைகளை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் கழித்து இலையை எடுத்து விடுங்கள். இப்படி செய்வதால் கண் திருஷ்டியால் அழக்கூடிய குழந்தைகள் அழுகையை உடனே நிப்பாட்டி விடும்.

இதையும் படிக்கலாமே:
வியாபாரம் சிறக்க எலுமிச்சை பழ பரிகாரம்

பப்பாளி இலை மற்றும் பப்பாளி பழம் ஆகியவை கெட்ட சக்திகளை ஈர்க்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த அற்புத பொருட்களாகும், எனவே இவைகளைக் கொண்டு இப்படி செய்வதன் மூலம் தீராத உடல் வலி தீரும். கண் திருஷ்டிகள் கழிந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வெள்ளிக்கிழமை தோறும் பசுவிற்கு பப்பாளி பழம் கொடுத்து வந்தால், வீட்டிற்கு இருக்கும் திருஷ்டியும் கழியும். புதிதாக வீடு கட்டியவர்கள், ஆல்டர் செய்தவர்கள், ஊரார் கண் படும்படி அற்புதமான வீட்டை கட்டி வைத்திருப்பவர்கள் தொடர்ந்து இது போல் செய்து வர, கண் திருஷ்டியால் வரக்கூடிய வீடு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சற்று முன்