மணக்க மணக்க உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தெரியுமா உங்களுக்கு? இதோ ரெசிபி. தயிர் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட அருமையான சைட் டிஷ்.

potato-fry_tamil
- Advertisement -

எவ்வளவு நாள் தான் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவல் செய்து சாப்பிடுவீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக இந்த மசாலாவை அரைத்து போட்டு உடுப்பி செயலில் ஒரு உருளைக்கிழங்கு வருவல் செய்து கொடுங்கள். அதுவும் இந்த மழைக்கு சுட சுட ரசம் சாதத்தோடு, இதை தொட்டு சாப்பிட அவ்வளவு அருமையான ருசி இருக்கும். வெயில் காலம் வந்தால் தயிர் சாதத்தோடு தொட்டு சாப்பிடலாம். நீங்க உருளைக்கிழங்கு பிரியவர்களாக இருந்தால் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க. வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

மீடியம் சைஸ் இருக்கும் 3 உருளைக்கிழங்குக்கு பின் சொல்ல கூடிய அளவுகள் சரியாக இருக்கும். மூன்று உருளைக்கிழங்குகளை எடுத்து தோல் சீவி, உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள். கியூப் வடிவத்தில் வெட்டிக் கொண்டாலும் சரி, அல்லது பிரெஞ்ச் ப்ரைட் செய்ய நீள நீளமாக வெட்டுவார்கள் அல்லவா அப்படி வெட்டிக் கொண்டாலும் சரி, அது உங்கள் சௌகரியம்.

- Advertisement -

வெட்டிய உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு கழுவி தண்ணீரை வடித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, கான்பிளவர் மாவு – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, போட்டு நன்றாக கலந்து இதை எண்ணெயில் போட்டு டீப் ஃப்ரை செய்ய வேண்டும். எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். மேலே மொறுமொறுவென உருளைக்கிழங்கு வேறுபட்டு நமக்கு கிடைத்துவிடும். எண்ணெயை வடிகட்டி விட்டு, தனியாக வறுத்த இந்த உருளைக்கிழங்கை வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன், ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயம் – 10, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு பல் – 2, மிளகு – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கி இறுதியாக ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவநிலை போட்டு, வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் ஒரு சொட்டு கூட ஊற்றாமல் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி, கருவேப்பிலை இரண்டு கொத்து, குறுக்கே கீரிய பச்சை மிளகாய் – 1, சேர்த்து அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து, ஒரு முறை நன்றாக வதக்கி விடுங்கள்.

விழுதின் பச்சை வாடை நீங்கியதும் 1 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து, வறுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் போட்டு, தேவைப்பட்டால் மேலே உப்புத் தூள் தூவி, உருளைக்கிழங்கை மசாலாவில் பிரட்டி 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து சிவக்க வைத்து எடுத்தால், சூப்பரான உடுப்பி உருளைக்கிழங்கு வருவல் தயார். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க.

- Advertisement -