- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உளுந்து மசாலா பூரி செய்முறை

உளுந்து மசாலா பூரி செய்முறை

- Advertisement -

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் பூரி. இது உப்பி வருவதை பார்த்தே பல குழந்தைகள் ஆசைப்படுவார்கள். என்னதான் நாம் வீட்டில் பூரி செய்தாலும் கடையில் செய்யும் அளவிற்கு புஸ் என்று உப்பிக்கொண்டு வராது. அது மட்டுமல்லாமல் மிருதுவாகவும் வராது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முறையில் நாம் பூரி செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் மிருதுவாக இருக்கும்.

அதோட மட்டுமல்லாமல் மைதா மாவை உபயோகப்படுத்தாமல் ஆரோக்கியமான உளுந்தை பயன்படுத்தி இந்த பூரியை செய்வதால் ஆரோக்கியத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. மேலும் இதில் நாம் மசாலா பொருட்களை சேர்ப்பதன் மூலம் தொட்டுக் கொள்வதற்கு கூட எதுவும் தேவையே இல்லை. வெறுமனே இந்த பூரியை அப்படியே நாம் சாப்பிட்டு விடலாம். அப்படிப்பட்ட ஒரு சுவையான உளுந்து மசாலா பூரியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • உளுந்து – 1/2 கப்
  • கோதுமை மாவு – 2 கப்
  • ரவை – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • ஓமம் – 1/4 ஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  • இஞ்சி – 1 இன்ச்
  • பச்சை மிளகாய் – 3
  • மல்லித்தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் உளுந்தை சுத்தம் செய்துவிட்டு 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய இஞ்சி இவற்றை சேர்த்து குறைந்த தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ரவையையும் சேர்த்து நாம் அரைத்து வைத்திருக்கும் உளுந்தையும் இதில் ஊற்றி தேவையான அளவு உப்பு, ஓமம், சீரகத்தூள், மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு பூரி மாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிணைந்து கொள்ளுங்கள். பிறகு எப்போதும் போல் பூரி தேய்ப்பது போல் தேய்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் தேய்த்து வைத்திருக்கும் பூரியை எண்ணெய் க்குள் போட வேண்டும்.

மற்ற புரிகளை செய்வதுபோல் உப்பவில்லை என்று வருத்தப்பட வேண்டியதே இல்லை. இதில் உளுந்து சேர்த்திருப்பதால் இது உடனே உப்பிவிடும். இரண்டு புறமும் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் நாம் மல்லி தூள் மிளகாய் தூள் என்றும் மசாலா பொருட்களை சேர்த்து இருப்பதன் மூலம் வெறுமனே சாப்பிட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: அரிசி மாவு சிப்ஸ் செய்முறை

ஒரே மாதிரி மைதா மாவு, சப்பாத்தி மாவில் பூரி செய்வதற்கு பதிலாக இந்த முறையில் உளுந்தை பயன்படுத்தி பூரி செய்து பாருங்கள். நீண்ட நேரம் ஆனாலும் பூரி புஸ் என்று உப்பிக்கொண்டு இருக்கும். குழந்தைகளும் ஆசைப்பட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

சற்று முன்