இடுப்பு, முதுகு, கை கால், மூட்டு வலி நிரந்தரமாக நீங்க, உளுந்தங்கஞ்சியை இப்படி காய்சி, குடிச்சு பாருங்க! வேலை செய்யும்போது, சோர்ந்துபோய் உட்காரவே மாட்டீங்க.

ulunthu-kanji-pain
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில், கொஞ்சம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறது. காரணம், நாம் சாப்பிடும் உணவு தான். சத்தில்லாத உணவு. வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து முழுதாகக் கிடைப்பது இல்லை. ஆகவே, நம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்தங்கஞ்சி குடிப்பது மிகவும் நல்லது. இந்த உளுந்தங்கஞ்சியை, விரைவாக சுவையாக, ஆரோக்கியமாக எப்படி காய்ச்சுவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

karuppu ulunthu

இதற்கு 1/4 கப் அளவு வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து ஆக இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உளுந்தை தண்ணீர் ஊற்றி மூன்று முறை கழுவி கொள்ள வேண்டும். அதன் பின்புதான், தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த தண்ணீரை, கீழே ஊற்றி விட கூடாது.

- Advertisement -

ஒரு மணி நேரம் ஊறிய உளுந்தை, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது ஊற வைத்த, சத்துமிக்க அந்த தண்ணீரை ஊற்றி தான் அறைக்கவேண்டும். மிகவும் கெட்டியாக அரைக்கக் கூடாது. தண்ணீர் பதத்தில் உளுந்தை, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ulunthu-kanji

அதன் பின்பு, அந்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி, மிதமான தீயில் அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் வரை கைவிடாமல் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், கஞ்சி உருண்டை பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கைவிடாமல் கலக்கி விடும் பட்சத்தில், நீர்ம நிலையில் இருக்கும் உளுந்த மாவு, கஞ்சி பதத்திற்கு வந்துவிடும்.

- Advertisement -

1/4 கப் உளுந்துக்கு, 1/2 கப் அளவு வெள்ளம் எடுத்துக் கொள்ள வேண்டும். 1/2 கப் அளவு வெள்ளத்திற்கு, 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடங்கள், அடுப்பில் வைத்து நன்றாக கரைத்து, வடிகட்டி, உளுந்தம் கஞ்சியில் சேர்த்து விடுங்கள். வெள்ளத்தின் பச்சை வாசனை போகும் வரை, மீண்டும் 5 நிமிடங்கள் கஞ்சியை, வெள்ளத்தோடு சேர்த்து கொதிக்க வைத்தாலே போதும்.

ulunthu-kanji1

வெள்ளத்தை சேர்த்த பின்பும் கைவிடாமல் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஏலக்காய் பொடி தூவி விடுங்கள். இறுதியாக நெய்யில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை இவைகளை வறுத்து சேர்த்தால் சுவையான ஆரோக்கியமான உளுந்தங் கஞ்சி தயார்.

- Advertisement -

இது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆண்களும் குடிப்பதில் தவறில்லை. இருப்பினும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்சனைகள், போன்ற ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும். வாரத்திற்கு மூன்று நாள் குடித்தால் கூட போதும். ஒரே மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
ரேஷன் அரிசியை, ஒருமுறை இந்த முறையில் சுத்தம் செய்து, சாதம் வடித்து தான் பாருங்களேன்! கடையில் காசு கொடுத்து அரிசி வாங்கவே மாட்டிங்க!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ulundhu kanji benefits in Tamil. Ulundhu kanji seimurai in Tamil. Ulundhu kanji uses in Tamil. Ulunthan kanchi recipe. Uluthanganji in Tamil.

- Advertisement -