சாப்பிடும் சாப்பாட்டிலும் தோஷமா? உணவில் இருக்கும் இந்த 5 தோஷங்கள் பற்றிய ரகசியத்தை நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

food-lakshmi
- Advertisement -

நாம் சாப்பிடும் உணவானது நமக்கு தோஷத்தை ஏற்படுத்தும் என்கிறது சாஸ்திரம். அது எதனால் உண்டாகிறது? சாப்பிடும் உணவானது யாரால் செய்யப்படுகிறது? யாரால் பரிமாறப்படுகிறது? எப்படி செய்யப்படுகிறது? எங்கே வைத்து செய்யப்படுகிறது? என்பது எல்லாம் மிகவும் முக்கியம். இதனை பொறுத்து நாம் உண்ணும் உணவு தோஷமாகவும் மாறிவிடுகிறது. இதனால் நமக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

food

முதலாவதாக நீங்கள் சாப்பிடும் உணவானது சரியாக ஜீரணித்து நன்மைகளை பெற நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து அந்த உணவானது செய்யப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தாசை பிடித்த மனிதன் சம்பாதித்த பணத்தில் இருந்து சமைக்கப்பட்ட உணவை நீங்கள் அருந்தினால் அந்த உணவானது அர்த்த தோஷம் எனும் தோஷத்தை பெறுகிறது. இதனால் உங்களுடைய புத்தி மழுங்கி நீங்கள் தீய வழியில் செல்லக் கூடும்.

- Advertisement -

இரண்டாவதாக நிமித்த தோஷம். சமைக்கும் உணவானது யாரால் செய்யப்படுகிறது? என்பது மிகவும் முக்கியம். சமைக்கும் உணவை நல்ல குணமும், நேர்மையும், அன்பும் கொண்டவார்களாகவும் சமைத்து இருந்தால் உங்களுக்கு தீய எண்ணங்கள் வராது. இதுவே நேர்மையற்ற, தீய குணங்களை கொண்ட ஒருவன் சமைத்த உணவை நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கும் அதே எண்ணங்கள் தான் உருவாகும் என்கிறது சாஸ்திரம். எனவே சமைப்பவர்கள் யார்? என்பதும் உணவின் தன்மைக்கு மிகவும் முக்கியம்.

kitchen1

மூன்றாவதாக சமைக்கும் இடமானது நல்ல அதிர்வலைகளை கொண்ட இடமாக இருக்க வேண்டும். அங்கு அனாவசிய சண்டைகள், விவாதங்கள் ஏற்பட்டால் அந்த உணவானது ஸ்தான தோஷம் எனும் தோஷத்தை பெறுகிறது. உள்ளன்போடு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் கூட அது அமுதத்திற்கு இணையானதாக மாறிவிடும். ஆனால் கோபத்துடனும், எரிச்சலுடனும் கொடுக்கும் உணவானது எதிர்மறை எண்ணங்களைத் தூண்டும். இதனால் சாப்பிடுபவர்களும் நல்ல மன நிலையை இழந்து தீய குணங்களுக்கு ஆட்பட நேரும்.

- Advertisement -

நான்காவதாக சாத்வீக உணவுகளை தான் நாம் சாப்பிட வேண்டும் என்கிறது சாஸ்திரம். பால், நெய், அரிசி, பருப்பு, மாவு போன்ற உணவு வகைகள் சாத்வீகம் நிறைந்தவை. இவை இறை உணர்வை அதிகரித்து, மன அடக்கத்தை, சகிப்புத் தன்மையை, வைராக்கியத்தை, கருணையை நமக்கு வாரி வழங்கும் தன்மை கொண்டது. எனவே சாத்வீக உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றமும் உண்டாகும்.

mamisam

சாத்வீக குணத்தை தவிர்த்து மாமிச உணவுகளையும், மற்ற உணவு வகைகளையும் சாப்பிட்டால் ஜாதி தோஷம் எனும் தோஷம் உணவிற்கு ஏற்படுகிறது. இந்த தோஷம் வெங்காயம், பூண்டு, மாமிசம், முட்டை போன்ற ராட்சத தன்மையுள்ள உணவு வகைகளில் உண்டாகிறது. அதனால் தான் சில வழிபாடுகளில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை கூட தவிர்ப்பது உண்டு. அதிக வேக வைத்த உணவு, அதிகம் வறுத்த உணவுகள், பழைய உணவுகள் ஆகியவற்றை உடலுக்கு நன்மைகளை விளைவிப்பவை அல்ல. மேலும் இவை தூய்மையாக கருதப்படுவதும் இல்லை. இதனால் தோஷங்கள் உண்டாகிறது. மனம் ஆன்மிக சிந்தனை இன்றி அச்சபடுதல், பாவம் செய்தது போன்ற உணர்வுகளை பெறுகிறது. எனவே உண்ணும் உணவிலும் எச்சரிக்கை தேவை! நாம் சாப்பிடும் சாதம் மூலமும் நம்முடைய குணாதிசயங்களும், செயல்களும் கூட மாறுபட வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -