யாருக்காவது சாப்பாடு போடும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள் தரித்திரம் உண்டாகும்!

food-eat
- Advertisement -

சாப்பாடு பரிமாறும் பொழுது மற்றும் உணவு உண்ணும் ஒரு சில விஷயங்களில் இந்த தவறுகளை நீங்கள் செய்தால் தரித்திரம் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியான தவறுகள் என்ன? நாம் எப்படி உணவு பரிமாறக் கூடாது? உணவு விஷயத்தில் நாம் செய்யும் தவறு தான் என்ன? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். தெரிந்தும் தெரியாமலும் இந்த தவறை நாம் செய்வதால் சில இன்னல்களுக்கு ஆளாக நேரலாம். அவைகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

eating-food

சாப்பாடு பரிமாறும் பொழுது மிக முக்கியமாக பெண்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும். பெண்கள் வீட்டில் குடும்பத்தாருக்கு பரிமாறினாலும் அல்லது விசேஷ வீடுகளில் சொந்த பந்தங்களுக்கு பரிமாறினாலும் கைகளில் வளையல் இல்லாமல் கட்டாயம் பரிமாறக் கூடாது. வளையல் போட்டு கொண்டு பரிமாறுவது சரியான முறையாகும். கைகளில் வளையல் இல்லாமல் பரிமாறினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகாது என்பார்கள். அது போல் கைகளில் வளையல் இல்லாமல் விளக்கு ஏற்றுவது மிகவும் தவறான செயலாகும். இதனால் நீங்கள் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். வீட்டில் வறுமை ஏற்படக்கூடும். இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்.

- Advertisement -

மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மற்ற வீடுகளில் கை நனைக்கக் கூடாது. அதாவது உணவருந்தக் கூடாது என்பார்கள். மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மற்றவர்கள் வீடுகளில் எதையும் இலவசமாக, தானமாக வாங்கக் கூடாது. அது போல் மலை ஏறுவது, முடி வெட்டுவது போன்ற செயல்களையும் செய்யக் கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

Mazaa during pregnancy

மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் எந்த கிழமையில் நீங்கள் சாப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வெள்ளிக்கிழமையில் மாமிசம் சாப்பிடுபவர்கள் வீட்டில் மகாலட்சுமி தேவி தங்க மாட்டாள் என்பது ஆகமவிதி. மகாலட்சுமி ஒரு வீட்டில் இல்லை என்றால் அந்த வீட்டில் செல்வ வளம் பெருகாது, வறுமை உண்டாகும். வெள்ளிக்கிழமையில் மாமிசம் சமைப்பதை தவிர்ப்பது மிக மிக உத்தமம். அது போல் புதன் கிழமைகளில் நிறைய பேர் மாமிசம் சாப்பிடுவது வழக்கமாக கொண்டிருப்பார்கள். மற்ற நாட்கள் மற்றும் கிழமைகளில் தெய்வங்களுக்கு உகந்ததாக இருந்தாலும் புதன் கிழமையில் அவ்வளவு விசேஷம் இல்லை என்பதால் புதன் கிழமை அன்று மாமிசம் சாப்பிடுவார்கள்.

- Advertisement -

புதன்கிழமையில் மாமிசம் சாப்பிடுவது தவறல்ல, தாராளமாக சாப்பிடலாம் ஆனால் புதன் கிழமையில் மாமிசம் சாப்பிடும் குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டம் குறையும். குழந்தைகளுடைய மூளைத்திறன் மந்த நிலை அடையும் என்பதால் புதன் கிழமையில் குழந்தைகளுக்கு மாமிசம் கொடுப்பதை தவிர்ப்பது ரொம்பவே நல்லது.

baby-eating4

உணவு பரிமாறும் பொழுது சாதம், உப்பு, ஊறுகாய் இவற்றை கைகளால் ஒருபோதும் பரிமாறக் கூடாது. அப்படி பரிமாறினால் தரித்திரம் உண்டாகும் என்பார்கள். வடை, அப்பளம், பழம் இவற்றை தவிர வேறு எந்த உணவு பொருளையும் பரிமாறும் பொழுது கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும். உணவு என்பது அன்னபூரணியை குறிப்பதால் அதற்குரிய மரியாதையைச் செலுத்தினால் தரித்திரம் நீங்கி, செல்வ வளம் பெருகும். செல்வ வளம் பெருக நீங்களும் இவற்றை பின்பற்றலாம்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -