ஜாடிக்குள் கொட்டி வைத்திருக்கும் உப்பு, இப்படி இருந்தால் கையில் இருக்கும் பணம் தண்ணீர் போல கரைந்து கொண்டே தான் இருக்கும். கல்லுப்பு வீட்டில் எப்படி இருக்கணும்? எப்படி இருக்கக்கூடாது?

uppu
- Advertisement -

கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்ய கூடிய விஷயம் பெரும்பாலும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. ஆனால், அந்த உப்பு நம்முடைய வீட்டில், நம் வீட்டு சமையலறையில், உப்பு ஜாடிக்குள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்க கூடாது என்பதை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒருவேளை உங்களுடைய வீட்டில் உப்பு இப்படி இருந்தால், நிச்சயம் பணம் தண்ணீர் போல கரைய தான் செய்யும், வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். வீட்டில் சில தேவையற்ற சண்டை சச்சரவுகள் வரும். அடிக்கடி வீட்டில் கசப்பான சம்பவங்கள் நடக்கும். வீட்டில் கஷ்டம் வராமல் இருக்க உப்பு ஜாடியை பராமரிப்பது எப்படி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

uppu-cash-salt

பெரும்பாலும் நம் வீட்டில் பணம் வீண் விரயம் ஆனால், ‘தண்ணீர் கரைவது போல பணம் கரைந்து கொண்டே இருக்கிறது.’ ‘பணம் தண்ணீராக செலவாகிறது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவோம் அல்லவா?’ இது முற்றிலும் உண்மை. பணத்திற்காக கஷ்டப்படும் எல்லோருக்கும் இந்த வார்த்தைக்கு உண்டான அர்த்தம் புரிந்திருக்கும்.

- Advertisement -

ஒரு வீட்டு உப்பு ஜாடியில் இருக்கும் கல் உப்பானது தண்ணீர்விட்டு, நீர்த்துப் போய், அந்த உப்பில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருந்தால், உங்களுடைய வீட்டில் நிச்சயமாக பண விரையம் ஏற்படும். பணம் தண்ணீர் போல செலவாக தான் செய்யும். அக ஒரு வீட்டு உப்பு ஜாடியில் இருக்கும் உப்பை தண்ணீர் விடாமல் நீர்த்துப் போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக மண்ணினால் செய்யப்பட்ட ஒரு குடுவையில் உப்பை சேகரித்து வைத்தால் அது தண்ணீர் விட்டுப் போகாமல் இருக்கும். அப்படி இல்லை என்றால் உப்பை, ஜாடியில் போட்டு வைக்கவேண்டும். எப்படி போட்டு வைத்தாலும் உங்களுக்கு உப்பில் தண்ணீர் விடுகிறது என்றால் அந்த உப்பில் கசியும் தண்ணீரை உறிஞ்சுவதற்கு நீங்கள் ஏதாவது குறிப்பை பின்பற்றலாம்.

- Advertisement -

அதாவது உப்பு ஜாடியின் அடியில் கொஞ்சம் பச்சரிசியை தூவி விட்டு விட்டு அதன் பின்பு அதன் மீது உப்பைக் கொட்டி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் சிறிது சோள மாவை முதலில் உப்பு ஜாடியின் அடியில் தூவி விட்டு, அதன் மேலே உப்பைக் கொட்டி வைத்தாலும் உப்பு நீர்த்துப் போகாது. தண்ணீர் விட்டுப் போகாது. நம் வீட்டிற்கு பணக் கஷ்டமும் வராது. உங்க வீட்ல உப்பு நீர்த்துப் போகும் பிரச்சனை இருந்தால், இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள் நிச்சயமாக வீட்டில் நல்லதொரு வித்தியாசம் தெரியும். (மகாலட்சுமியாப்பட்டவள் உப்பிலிருந்து தண்ணீராக கரைந்து வெளியேறுவது போல, நம் வீட்டில் இருக்கும் பணமும், வீட்டிலிருந்து வீண் விரயமாகி வெளியேறும் என்பது தான் இதற்கு அர்த்தம்.)

salt

அடுத்தபடியாக நிறைய பேர் வீட்டில் உப்பு ஜாடியில், கல்லுப்பு நிறைவாக இருக்க வேண்டுமென்று உப்பை திணித்து திணித்து, அதாவது ஜாடியை குலுக்கி குலுக்கி நிரம்ப நிரம்ப உப்பை கொட்டி வைத்து இருப்பார்கள். அந்த உப்பை கைவிட்டு எடுக்கவே கஷ்டமாக இருக்கும். அப்படியே உப்பு கட்டிப்பிடித்து இருக்கும்.

இப்படி எந்த வீட்டு உப்பு ஜாடியில் கல்லுப்பு இருக்கமாக இருக்கின்றதோ அந்த வீட்டில் இருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் இவர்களுடைய மனதும் இருக்கமாகத்தான் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் தான். கல்லுப்பு உப்பு ஜாடியில் நிறைவாக இருக்க வேண்டும் அதற்காக அதை போட்டு திணித்து வைக்க கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -