உப்பை கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்தாலும், பீங்கான் ஜாடியில் போட்டு வைத்தாலும், உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக இருக்கவே மாட்டாள்! கையில் காசும் சேராது. இந்த தவறை நீங்கள் செய்கிறீர்களா?

salt2
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் கல்லுப்புக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை அந்த காலத்திலிருந்தே கொடுத்துதான் வந்தார்கள். காலப்போக்கில், எப்படி எல்லா பழக்க வழக்கங்களும் மாறி விட்டதோ, அதேபோல் உப்பை வாங்கி சேகரித்து வைக்கும் பழக்கமும் மாறிவிட்டது. சமீபகாலமாக உப்பு ஒரு வீட்டில் சுத்தமாக தீரக் கூடாது, என்ற சாஸ்திர குறிப்பை சமூக வலைதளங்களின் மூலம் நாம் நினைவு கூர்ந்து இருக்கின்றோம் என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. இந்த உப்பு ஜாடியிலும் சரி, நம் வீட்டில் வைத்திருக்கும் மசாலா பெட்டியிலும் சரி, அதாவது அஞ்சறைப்பெட்டியிலும் மகாலட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இந்த உப்பு ஜாடியிலும், மசாலா பெட்டியையும் உபயோகிக்கும்போது, சமையல் அறையில் பெண்கள் செய்யவே கூடாத தவறு என்று சில இருக்கின்றது.

uppu jaadi

இந்த தவறுகளை நீங்கள் உங்கள் சமையலறையில் செய்தால், கட்டாயம் உங்கள் வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வரும். வீட்டிற்கு தரித்திரம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டுமென்றால், பின் வரக்கூடிய குறிப்புகள் உங்களுடைய மனதிற்கு சரி என்று பட்டால், உங்கள் வீட்டிலும் நீங்கள் இதை பின்பற்றி வரலாம்.

- Advertisement -

பிளாஸ்டிக் டப்பாவில் உப்பை போடக்கூடாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். நீங்கள் கண்ணாடி ஜாடியில் உப்பை போட்டு இருந்தாலும் சரி, பீங்கான் ஜாடியில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, அதன் உள்ளே பயன்படுத்த சில்வர் ஸ்பூன், பிளாஸ்டிக் ஸ்பூன் கட்டாயம் போட்டு வைத்திருக்க கூடாது. அது ஆன்மீக ரீதியாகவும் சரியானது அல்ல. ஆரோக்கிய ரீதியாகவும் சரியானது அல்ல. இப்போதெல்லாம் மரத்தினால் செய்யப்பட்ட சின்ன சின்ன அளவில் கரண்டி விற்கின்றது. அதை வாங்கி உப்பு ஜாடியில் போடுவது தான் நல்லது.

salt

இதே போல் சில பேர் சாப்பிடும்போது, உப்பு ஜாடியை அப்படியே கொண்டு வந்து பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். சாப்பாட்டில் உப்பு குறைவாக இருக்கிறது என்றால், உப்பு ஜாடியில் தங்களுடைய இடது கையை விட்டு உடனே உப்பை எடுத்து சாப்பாட்டில் போட்டுக் கொள்வார்கள். இது மிக மிக தவறான பழக்கம். உப்பு ஜாடியை உப்பு வைக்கும் இடத்தில் இருந்து நகத்தவே கூடாது. தேவைப்பட்டால் அதிலிருந்து கொஞ்சம் உப்பை எடுத்து சிறிய பாத்திரத்தில் போட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

உப்பு ஜாடி, வீட்டில் உடைய கூடாது என்று சொல்லுவார்கள். அது அபசகுனத்தை குறிக்கும். வீட்டில் கஷ்டத்தை உண்டாக்கும். இதனால் கூட உப்பு ஜாடியை சமையலறையிலிருந்து வெளியே கொண்டு வரக்கூடாது என்றும் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கலாம். எது எப்படியாக இருந்தால் என்ன? உப்பை ஜாடியோடு எடுத்த பயன்படுத்தக்கூடாது. சரி உப்பை கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தும் பாத்திரம் மட்டும், சில்வரிலோ பிளாஸ்டிக்கிலோ இருக்கலாமா? இப்படி கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தி விட்டு, மீதமுள்ள அந்த உப்பை அந்த சில்வர் பாத்திரத்தில் விட்டு வைக்கக்கூடாது. உடனே நீங்கள் சாப்பாடு சாப்பிட்டு முடித்தவுடன், மீதமுள்ள உப்பை ஜாடியில், கொட்டிவிட வேண்டும். சின்ன சின்ன மண்பாண்டங்கள் எல்லாம் இப்போது கடைகளில் சுலபமாக கிடைக்கின்றது. உங்களால் முடிந்தால் சில்வர், பிளாஸ்டிக்குக்கு பதில் அதை வாங்கி வைத்துக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

anjarai-petti

அடுத்தப்படியாக நம் வீட்டிலிருக்கும் அஞ்சறைப்பெட்டிக்கு வருவோம். சில வீடுகளில், கட்டாயம் அசைவம் சமைக்கும் பழக்கம் இருக்கும். அசைவம் சமைக்கும் போதும், அஞ்சரை பெட்டியிலிருந்தும், உப்பு ஜாடியில் இருந்தும் தான், பொருட்களை எடுத்து, சமையலுக்கு படுத்திக் கொள்வோம். இது தவறு என்று சொல்லப்படவில்லை.

- Advertisement -

anjaraipetti2

ஆனால் அசைவத்தை தொட்ட அதே கையோடு, அசைவ பாத்திரத்தை தொட்டுவிட்டு, முடிந்தவரை மசாலாப் பெட்டியிலும், உப்பு ஜாடியிலும் உங்களது கையை விட வேண்டாம். அதாவது நீங்கள் அசைவத்தை தொட்டுவிட்டு, உங்கள் கையை நன்றாக அலம்பி இருப்பீர்கள். ஆனால், அந்த அசைவ வாடை, உங்களுடைய கையை விட்டு கட்டாயம் நீங்கி இருக்காது.

salt1

உங்கள் கையில் இருக்க கூடிய அந்த வாடையோடு, உப்பு ஜாடிக்குள்லியோ, அஞ்சரை பெட்டிக்கு உள்ளேயோ, கையை விடவே கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உங்கள் வீட்டில் மேலும் மேலும் கஷ்டம்தான் வருமே தவிர நிம்மதியான சூழல் நிலவாது.

சரி, இதற்கு தீர்வு? அசைவத்தை தொடுவதற்கு முன்பாகவே தேவையான மசாலா பொருட்களை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, அதை சமையலுக்குப் பயன்படுத்துங்கள். உப்பை ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு, அதை உங்களுடைய சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். முடிந்த வரை எல்லாவற்றிலும் கையில் போடாமல், ஒரு ஸ்பூனை வைத்து பயன்படுத்துவது மேலும் உத்தமமானது.

ever-silver-vessels

முடிந்தவரை அசைவம் சமைத்த பாத்திரத்தில், விரத நாட்களில் சமையல் செய்து சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. அசைவத்திற்கு தனியான பாத்திரம், சைவத்திற்கு தனியான பாத்திரம் என்று பயன்படுத்தினால், அது மிகவும் நல்லது. சில பேர் வீடுகளில் அமாவாசை சமையல், திதி அன்றைக்கு சமைக்கும் சமையல், சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும் போது சமைக்கும் சமையல் இதற்கெல்லாம் தனிப் பாத்திரத்தை வைத்து புழங்குவார்கள் அப்படி வைத்திருந்தாலும் அது நன்மையை!

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இருக்கும் நாற்றம் பிடித்த, அழுக்கான தலையணையை கூட, 10 நிமிடத்தில் சுத்தமாக, புதுசு போல் மாற்றிவிட முடியும். இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -