உங்கள் வீட்டில் இருக்கும் நாற்றம் பிடித்த, அழுக்கான தலையணையை கூட, 10 நிமிடத்தில் சுத்தமாக, புதுசு போல் மாற்றிவிட முடியும். இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க.

pillow

நம்முடைய வீட்டில் இருக்கும் தலையணைகளை மேல் கவர் போட்டு, அதாவது தலையணை உறை போட்டு, எவ்வளவுதான் பத்திரமாக வைத்திருந்தாலும், அந்த தலையணை அழுக்கு படிந்து, நம் தலையில் இருக்கும் எண்ணை பிசுக்கு ஒட்டி, வியர்வை ஒட்டி, ஒரு துர் நாற்றம் வீசும். இந்த பழைய தலையணைகளை தூக்கி போட்டு விட்டு, இனி புதியதாக தலையணைகளை வாங்க வேண்டாம். பழைய தலையணையை துவைத்து புதுசு போல் எப்படி மாற்றுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pillow3

முதலில் ஒரு அகலமான டப் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு வெந்நீரை ஊற்றி, துணி துவைக்கும் பவுடர் அல்லது லிக்விட் இருந்தால் மிகவும் நல்லது. அதை 2 ஸ்பூன் போட்டு கொள்ளுங்கள். வாசனை கொடுக்கும் ஃபேப்ரிக் கண்டிஷனர் இருந்தால் அதை பயன்படுத்தலாம். இல்லை என்றால் வாசனை உள்ள ஷாம்புவை ஒரு ஸ்பூன் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, துணி துவைக்கும் சோடா உப்பு. மளிகை கடைகளில் துணி துவைக்க சோடா உப்பு தேவை என்றால் கொடுப்பார்கள். அதை வாங்கி அதில் இருந்து 2 ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். வினிகர் ஒரு மூடி. இவை அனைத்தையும் சுடுதண்ணீரில் போட்டு ஒரு குச்சியை விட்டு நன்றாக கலந்து விட்டு கொள்ளுங்கள்.

pillow1

டிடர்ஜென்ட் லிக்விட், துணி துவைக்கும் சோடா உப்பு, வாசனைக்காக ஒருஸ்பூன் ஷாம்பூ, வினிகர் ஒரு மோடி. மொத்தமாக நான்கே பொருட்கள் தான் தேவை. தயாராக இருக்கும் சுடுதண்ணீரில் தலையணையை போட்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் நன்றாக ஊற வைத்து எடுத்தால் அதில் இருக்கும் அழுக்கு சுத்தமாக வந்திருக்கும்.

- Advertisement -

ஊறவைத்து அழுக்கு நீக்கப்பட்ட இந்த தலையணையை, உங்களுடைய வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தால், அதில் போட்டு துணி துவைப்பது போலவே துவைத்து எடுத்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. வாஷிங் மெஷினுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

pillow2

வாசிங்மிஷின் இல்லாதவர்கள் மூன்று முறை நல்ல தண்ணீரில் அலசி, சுத்தமாக பிழிந்து, நன்றாக வெயிலில் உலர வைத்து விடுங்கள். பின்பு பாருங்கள் உங்களது தலைமையில் இருக்கும் துர்நாற்றம் நீங்கி, தலையணை புதுசு போல் மாறிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒரு முறை உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய முகம் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? கால் பாதங்களுக்கு அழகு வேண்டாமா? பாதங்களையும் வெள்ளையாக, அழகாக வைத்துக்கொள்ள 10 நிமிடம் போதுமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.