ஒருவன் நம்மிடமே வேலையை கற்றுக்கொண்டு, நம்மிடமே ஜூனியராக வேலை செய்து, நம்மை விட உயர்ந்த பதவியில், நம்மை விட வாழ்க்கையில் மேலே உயர்ந்து செல்வது தவறு கிடையாது. ஆனால் நம் உடனே இருந்து, நம்மிடமே எல்லா விஷயத்தையும் கற்றுக்கொண்டு, நம்மை மிதித்து நசுக்கி, சாகடித்து விட்டு நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விட்டு, ஒருவன் மேலே ஏறி செல்கின்றான் என்றால் அது தவறு.
இதுபோல எதிரி பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உறவினர்களாக இருப்பார்கள், நண்பர்களாக இருப்பார்கள், ஆனால் கால சூழ்நிலை அவர்களை எதிரிகளாக மாற்றி இருக்கும். ஒரே தொழிலில், ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் இருந்தாலும் இதுபோல பிரச்சனை வரும். எனக்கு வந்த வாய்ப்பை நீ தட்டிப் பறிக்கிறாய், உனக்கு வந்த வாய்ப்பை நான் தட்டிப் படிக்கிறேன் என்று பெரிய போராட்டமே நடக்கும்.
இப்படிப்பட்ட எதிரி தொல்லையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது. நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நம்முடைய தொழிலுக்கு நம்முடைய வேலைக்கு போட்டி போடும் எதிரியை நம்மை விட்டு தள்ளி வைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.
உப்பு பிள்ளையார் பரிகாரம்
வாரத்தில் ஒரு நாள் இந்த வழிபாட்டை செய்யலாம். ரொம்பவும் எதிரி தொல்லை அடங்கவே மாட்டேன்றான், இவனை எப்படியாவது, கடவுளே என்னை விட்டு பிரித்து வை என்று வேண்டினால், தினமும் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு உங்களுக்கு தேவை கல் உப்பு. கல் உப்பில் மஞ்சள் பிள்ளையார் போல பிடிக்க வேண்டும்.
இது அவ்வளவு கஷ்டமாக இருக்காது. கல்லுப்பை நன்றாக நசுக்கி தூள் செய்து கூட அதில் பிள்ளையார் பிடித்துக் கொள்ளலாம். ஊதுவத்தி அச்சு கோன் கடைகளில் விற்கும். அதன் உள்ளே கல்லுப்பை போட்டு கவிழ்த்து கூட நீங்கள் இதுபோல பிள்ளையாரை பிடிக்கலாம். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பது போல கல் உப்பில் பிள்ளையார் பிடித்து வைக்கணும். அவ்வளவுதான்.
இந்த பிள்ளையாருக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து ஒரு வெற்றிலையின் மேல் வைத்து பூஜை அறையில் வைத்து விட்டு, அருகம்புள்ளால் அர்ச்சனை செய்ய வேண்டும். விக்னங்களை தீர்க்கும் விநாயகா என் எதிரி தொல்லையை தீர்த்து வை என்று வேண்டிக் கொள்ளுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு அந்த பிள்ளையாரை எடுத்து தண்ணீரில் கரைத்து விடுங்கள்.
உங்கள் எதிரி காணாமல் போய்விடுவான். உப்பு தண்ணீரில் கரைந்து எப்படி காணாமல் போனதோ அதேபோல எதிரி உங்களை கண் முன்னால் இல்லாமல் காணாமல் போய்விடுவான். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். தொடர்ந்து 11 நாள் செய்யலாம். இல்லையென்றால் தொடர்ந்து 11 திங்கட்கிழமை இதை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: புது முயற்சிகள் வெற்றி அடைய அரசமர பரிகாரம்.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிரியை பிள்ளையார் பார்த்துக் கொள்வார். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் எதிரிக்கு ஏதேனும் உயிர் ஆபத்து வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படாதீங்க. எதிரி உங்களை விட்டு தூரச் செல்வான் அதுதான் நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாட்டினை பின்பற்றி பலன் பெறவும்.