- Advertisement -
Homeவீட்டு தோட்டம்இனி உர மண்ணை காசு குடுத்து வாங்கவே வேண்டாம். உங்ககிட்ட இருக்க சாதாரண மண்ணை வைச்சு...

இனி உர மண்ணை காசு குடுத்து வாங்கவே வேண்டாம். உங்ககிட்ட இருக்க சாதாரண மண்ணை வைச்சு சுலபமா செடி வளர்க்கலாம் தெரியும்மா?. செடி வளர்க்க ஆசை படுறவங்க கண்டிப்பா தெரிஞ்சி வைச்சிக்கோங்க.

- Advertisement -

ஒரு செடி நன்றாக வளர அடிப்படையே மண் தான். மண் வளமாக இருந்தால் தான் எந்த செடி வைத்தாலும் அதற்கு நாம் என்ன உரம் கொடுத்தாலும் நன்றாக வளரும். மண் சரியில்லாமல் போனால் நீங்கள் எவ்வளவு உரம் கொடுத்தாலும் என்ன பராமரித்தாலும் செடி நன்றாக தழைத்து வராது. ஒரு சாதாரண மண்ணை செடிகள் வைத்து வளர்க்கக்கூடிய வளமான மண்ணாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி தான் இந்தக் குறிப்பில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இது வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல பெரிய அளவில் தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட இன்றளவும் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம் தான். இப்படி மண்ணை பக்குவப்படுத்திய பிறகு இதில் அதிக உரங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது. விவசாயிகளும் பயன்படுத்திய கொஞ்சம் பழமையான முறை தான் இது.

- Advertisement -

முதலில் பச்சைப்பயிறு ஒரு கைப்பிடி எடுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சைப் பயிறு இல்லாத சமயத்தில் வேறு எந்த பயிறு இருந்தாலும் பரவாயில்லை, முதல் நாள் இரவே ஊற வைத்து அடுத்த நாள் நன்றாக ஊறிய இந்த பயிரை எடுத்து, சாதாரண மண்ணை ஒரு பக்கெட்டில் நிரப்பிக் அதில் இந்த பயிரை லேசாக மேலே அழுத்தி வைத்து விட்டால் ( விதை போடுவது போல) போதும். ஒரு வாரத்திற்கெல்லாம் துளிர்த்து பத்து நாட்களுக்குள் ஓரளவுக்கு செடி நன்றாக வளர்ந்து விடும். இதற்கு லேசாக தண்ணீர் மட்டும் தெளித்து வந்தால் போதும் வேறு எதுவும் செய்ய வேண்டாம்.

40 நாட்கள் வரை இதை அப்படியே வளர்த்தால் செடியில் காய் வைத்து நன்றாக வளர்ந்து இருக்கும். அதன் பிறகு அந்தச் செடிகளை எல்லாம் அதிலிருந்து வெளியில் எடுத்து சின்ன சின்னதாக நறுக்கி விடுங்கள். இப்போது பக்கெட்டில் இருக்கும் மண்ணை கீழே கொட்டி விடுங்கள். அதன் பிறகு இந்த நறுக்கிய தலைகள் ஒரு லேயர், மணல் ஒரு லேயர் என இப்படி மாற்றி மாற்றி போட்டு தண்ணீர் தெளித்து அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

20 நாட்கள் வரை இதை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டு விடுங்கள். இப்போது இதில் இருக்கும் அந்த தழைகள் எல்லாம் நன்றாக மக்கி மணலுடன் கலந்து உர மண்ணாக மாறி இருக்கும். இந்த மண்ணில் நீங்கள் எந்தச் செடி வைத்தாலும் நன்றாக தழைத்து வளரும். இந்த செடியில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற செடி வளர தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கும். அதை நறுக்கி மண்ணில் கலக்கும் போது இந்த மண்ணிலும் உரங்கள் ஊறி இருக்கும். இந்த முறையில் பயிறு செடி பூ காய் வைத்த பிறகு எதை செய்தால் தான் உரங்கள் அனைத்தும் முழுவதுமாக கிடைக்கும்.

இந்த முறை மிக மிகப் பழமையான முறை தான் இதை செய்ய கொஞ்சம் காலம் அவகாசமும் வேண்டும் ஆனால் நல்ல பலனளிக்கக்கூடிய முறை இதில் செடி வைக்கும் போது வேறு உரங்கள் கூட போட வேண்டியது இருக்காது.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் மீன் தொட்டி இருக்கிறதா? அந்த தண்ணீரை என்ன செய்வீர்கள்? இப்படி மட்டும் செஞ்சு பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

நீங்களும் உங்களிடம் எந்த மண் இருந்தாலும் அதை இப்படி உரம் மண்ணாக மாற்றி அதன் பிறகு செடி வைத்து பாருங்கள் நீங்கள் எதை வைத்தாலும் தழைத்து வளரும்.

சற்று முன்