உங்க வீட்டில் மீன் தொட்டி இருக்கிறதா? அந்த தண்ணீரை என்ன செய்வீர்கள்? இப்படி மட்டும் செஞ்சு பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

fish-tank-garden
- Advertisement -

இன்று பெரும்பாலானோர் வீடுகளில் மீன் தொட்டி வளர்ப்பது இயல்பாகி போய்விட்டது. அழகிய வர்ண மீன்களின் மீது பிரியம் கொண்டவர்கள், அதை கண்ணாடி தொட்டிகளில் போட்டு வீடுகளில் வைத்து ரசிப்பது உண்டு. மீன் தொட்டி இருக்கும் இல்லங்களில் அதிர்ஷ்டம் வரும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய மீன் தொட்டியில் இருக்கும் தண்ணீரை நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த தண்ணீர் உங்கள் வீட்டு தோட்டத்திற்கு எப்படி செழிப்பை தரும்? என்பதை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

மீன் தொட்டியில் இருக்கும் தண்ணீர் உப்பு தண்ணீராக இருக்கக் கூடாது. உப்பு தண்ணீராக இருக்கும் பட்சத்தில் இது தோட்டத்தில் பயன்படுத்தினால் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே மீன் தொட்டியில் இருக்கும் தண்ணீர் ஆனது உப்பு இல்லாத சுத்தமான நல்ல தண்ணீராக இருக்க வேண்டும். மீன் வெளியிடும் கழிவுகள் மற்றும் அது உட்கொள்ளும் மீந்து போன உணவு கழிவுகள் ஆகியவை கலந்த இந்த தண்ணீரில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கும்.

- Advertisement -

இந்த சத்துக்கள் நிறைந்த தண்ணீரை நீங்கள் கீழே வீணாக்க கொட்டி விடாமல் உங்களுடைய தோட்டம், செடி, கொடிகளுக்கு பயன்படுத்தினால் அது நல்ல சத்துள்ளதாக செழிப்பாக வளரும். இந்த அழுக்கு கலந்த தண்ணீர் ஆரோக்கியமானது இல்லை என்றாலும், இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் மற்றும் செடி, கொடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற சத்துக்கள் இதில் அதிகம் நிறைந்துள்ளதால் உங்களுடைய தோட்டங்களுக்கு பயன்படுத்தும் பொழுது அது சத்துக்களை உறிந்து செழிப்பாக வளர்கிறது.

மீன் தொட்டியில் இருக்கும் பாசிகள் கூட தோட்டக்கலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரின் பி.எச் அளவு தோட்டத்திற்கு சிறந்த பலன்களை அளிக்க கூடியதாக இருக்கிறது. மேலும் மீன் அதில் இறந்து விட நேர்ந்தால் அதை நீங்கள் குப்பையில் தூக்கி போடாமல், இறந்த மீன்களை தோட்டத்தில் இருக்கும் மண்ணின் அடியில் புதைத்து வையுங்கள். இப்படி மீன் தொட்டியில் இருக்கக்கூடிய மீன் மற்றும் மீன் கழிவுகள், தண்ணீர், பாசி போன்ற அனைத்துமே நம்முடைய தோட்டத்திற்கு சிறந்த ஒரு உரமாக இருந்து வருகிறது.

- Advertisement -

தொட்டியில் இருக்கும் மீன் மட்டும் அல்லாமல் நாம் சமைக்க கூடிய மீன்களில் இருக்கக்கூடிய கழிவுகளில் உள்ள அம்மோனியா போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருப்பதால் இது காய்கறி மற்றும் பூச்செடிகளுக்கு நல்ல ஒரு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் இது மண்ணில் விரைவாக உறிஞ்சப்பட்டு விரைவான பலன்களை கொடுக்கிறது. மற்ற ரசாயன உரங்களை விட, மீன் இறைச்சியால் கிடைக்கக்கூடிய உரங்கள் செடிகளுக்கு சிறப்பான, அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கிறது.

இதையும் படிக்கலாமே:
பூக்கவே பூக்காத பன்னீர் ரோஜா செடியை பூக்க வைக்க, இந்த உரத்தை கொடுத்தா போதும், அப்புறம் பாருங்க உங்க செடியே தெரியாத அளவுக்கு கொத்து கொத்தா பூ பூக்கும்.

வெங்காயம், தக்காளி, முட்டை போன்றவற்றை எப்படி நாம் செடிகளுக்கு அருகில் வைத்து விடுகிறோமோ, அதே போல மீனுடைய தலைகள் அல்லது மீன் கழிவுகள் போன்றவற்றையும் நீங்கள் செடிகளுக்கு அருகில் வேர் பக்கத்தில் வைத்து விட்டால் போதும், அது அதனுடைய சத்துக்களை உரமாக்கி கொண்டு விடும். புதிதாக காய்கறி செடி அல்லது பூச்செடிகள் வளர்ப்பவர்கள் தொட்டியின் அடியில் இது போல மீன் கழிவுகளை போட்டு ஐந்து சென்டிமீட்டர் ஆழத்தில் புதைத்து பின்னர் செடிகளை நட்டு வைத்தால் விரைவான வளர்ச்சியை நீங்கள் காணலாம்.

- Advertisement -