உங்க வீட்ல உளுந்து மட்டும் இருந்தா போதும். சூப்பர் அப்பளம், சுலபமா செஞ்சிடலாம். கடையில் வாங்குவது மாதிரியே இருக்குமுங்க!

appalam1
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் எல்லோருக்குமே பிடித்த ஒரு பொருள் என்றால், அந்த வரிசையில் அப்பளமும் ஒன்று. இந்த அப்பளத்தை அதிக விலை கொடுத்து, நாம் கடையில் இருந்து வாங்குகின்றோம். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தோம் என்றால், சுலபமான, சுவையான அப்பளத்தை நம் வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

appalam

அப்பளம் செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 கப் (250 கிராம்)
சோடா உப்பு – 1/2 ஸ்பூன் (2.5ml) தூள் உப்பு – 1/2 ஸ்பூன் (2.5ml)
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

- Advertisement -

முதலில் உளுந்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த உளுந்தை, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் குருணை சல்லடையில் நிற்கும் அல்லவா? மீண்டும் அதை மிக்சியில் போட்டு எவ்வளவு முடியுமோ, அந்த குருணையை நைசாக அரைத்து, சலித்து கொள்ளுங்கள். மீதம் இருக்கும் நறநற பருப்பை இட்லிக்கு மாவு ஆட்டும் போது சேர்த்துக்கொள்ளுங்கள். அப்பள மாவு பிசைய, நைசாக இருக்கும் உளுந்து மாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

appalam3

முதலில் அகலமான பாத்திரத்தில் தயாராக இருக்கும், நைசாக அரைத்து வைத்திருக்கும், உளுந்த மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பையும், சோடா உப்பையும் சேர்த்து முதலில் மாவோடு கலந்து விட்டு, அதன் பின்பாக, பூரி மாவு பிசையும் பதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் ஊற்றி உளுந்த மாவை பிசைய வேண்டும். சிலபேர் சப்பாத்தி மாவை கொஞ்சம் இலகுவாக பிசைவார்கள். ஆனால் அப்பளதிர்க்கு மாவு பிசையும் போது, முதல் கட்டத்தில், அப்பள மாவானது, பூரி மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டி ஆகத்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் பிசைந்துகொண்டே இருக்கும்போது, அந்த உளுந்த மாவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி கெட்டி பதத்திற்கு மாறும். மீண்டும் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு, நன்றாக பிசைய வேண்டும். இப்போது உங்கள் கைகளில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெயை எடுத்து, மாவில் பரவலாக ஊற்றி, அந்த அப்பளம் மாவை மறுபடியும் பிசைய தொடங்க வேண்டும்.

appalam4

நல்லெண்ணெயை தடவி மூன்று நிமிடங்கள், உங்களது உள்ளங்கை மாவில் படும்படி, நன்றாக அழுத்தி பிசைந்து, ஒரு தட்டு போட்டு மூடி வைத்துவிடுங்கள். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை மாவு நன்றாக ஊறட்டும். நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் மாவு மீண்டும் கெட்டித்தன்மைக்கு சென்றிருக்கும்.

- Advertisement -

15 நிமிடங்கள் கழித்து, அப்பளம் மாவை எடுத்து மீண்டும் பிசைய தொடங்கவேண்டும். அப்பளம் மாவு பூரிமாவு படத்திலிருந்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மாற, ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு, தேவை பட்டால் இன்னொரு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு பிசைய வேண்டும். இறுதியாக 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பிசைந்து முடித்தால், அப்பளம் மாவு ரெடி. எக்காரணத்தைக் கொண்டும் அப்பள மாவு பிசுபிசுவென்று உங்கள் கைகளில் ஒட்டக் கூடாது.

appalam5

(ஆரம்பக்கட்டத்தில் பூரி மாவு அளவிற்கு கெட்டியாக இருக்கும் அப்பளம் மாவானது, கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி பதத்திற்கு செல்ல வேண்டும். எடுத்த உடனேயே தண்ணீரை ஊற்றி விட்டால் மாவு கொல கொல என்று மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.)

முதலில் இந்த அப்பள மாவினை, நம் வீட்டில் சப்பாத்திக்கு உருண்டை பிடிக்கும் அளவு, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். இதைத் தேய்க்கும்போது ஒட்டாமல் இருக்க மைதாமாவை பயன்படுத்த போகின்றோம். சப்பாத்தி மாவு தேய்க்கும் கட்டையில் சிறிதளவு மைதா மாவு தூவி, ஒவ்வொரு உருண்டையாக உங்களால் எவ்வளவு மெல்லியதாக தேய்க்க முடியுமோ அவ்வளவு மெல்லிசாக தேய்த்துக் கொள்ளுங்கள். கடையில் விற்கும் அப்பளம் பார்த்திருப்பீர்கள் அல்லவா?

appalam6

பெரிய வட்ட வடிவில் இருக்கும் அந்த அப்பளமாவு வட்டத்தை, குட்டி டிபன் பாக்ஸ், வட்ட வடிவில் உங்கள் வீட்டில் இருக்கும் அல்லவா? அதை கவிழ்த்து, சிறிய சிறிய வட்ட மாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ, அந்த அளவு நுனி கூராக இருக்கும் டப்பா அல்லது டம்ளரை பயன்படுத்தி அப்பளத்தை வட்ட வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். (வடிவம் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால், அந்த பெரிய அப்பளத்தை, நான்காக வெட்டிக் கொள்ளுங்கள். முக்கோண வடிவில் அப்பளம் தயாராகிவிடும். வேலையும் சுலபமாகிவிடும்.)

இப்போது வட்டவடிவில் மாற்றியது போக, மீதி மாவு இருக்கும். தேவைப்பட்டால் வேறு வேறு வடிவத்தில் குட்டி குட்டி வடிவத்தில் கூட, கத்தியை வைத்து அந்த மாவை வெட்டி வடிவமே இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். இல்லை என்றால், இறுதியாக துண்டு விழுந்த மாவை எல்லாம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து, மறுபடியும் வட்ட வடிவில் தேய்த்து குட்டி குட்டி அப்பளமாக மாற்றிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

appalam7

இப்போது தயார் செய்து வைத்திருக்கும் அப்பளத்தை ஒரு மைக்கா கவரின் மீதோ அல்லது தாம்பல தட்டின் மீதோ போட்டு வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும். பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை, அப்பளத்தை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு காய வைத்தாலே போதும். மழைக்காலமாக இருந்தால் ஒரு நாள் இரவு முழுவதும் ஃபேன் காற்றில் காய விட்டு விடுங்கள்.

appalam2

லேசான வெயில் வந்தால்கூட அதில் போட்டு எடுத்து, காய்ந்த டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டால் 30லிருந்து 40 அப்பளங்கள் உங்கள் கையில் கிடைத்து விடும். நாமே தயாரித்த அப்பளம் பொரித்து சாப்பிடும் போது சந்தோஷமாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், உங்கள் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
காய்கறியே இல்லாமல் ‘அருமையான குருமா கிரேவி’ காரசாரமாக எப்படி வைப்பது? டிபன், சாப்பாடு ரெண்டுக்கும் செம்ம காம்பினேஷன்!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Appalam making recipe in Tamil. Appalam making at home. Appalam making recipe. Appalam making process in Tamil. Appalam poduvathu eppadi.

- Advertisement -