முடி வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்க, இந்த நேரத்தில், இந்த 2 பொருட்களை உங்களுடைய தலையில் போட மறக்காதீங்க! கட்டுக்கடங்காமல் முடி வளர்ந்து கொண்டே செல்லும்.

hair

முடி வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்க, நேரம் காலம் கூட உள்ளதா? என்று நிறைய பேருக்கு சந்தேகங்கள் இருக்கும். ஆனால் தற்போது இருப்பது வெயில் காலம். இந்த வெயில் காலத்தில் சில பேருக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். உடல் சூட்டினால் முடி கொஞ்சம் உதிரத்தான் செய்யும். இதோடு சேர்த்து தலையில் அழுக்கும் வியர்வையும் சேர்ந்து முடி உதிர்வு அதிகரிக்கும். இந்த வெயில் சமயத்தில் முடி அதிகமாக உதிர்கிறது என்பவர்களும் இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும். முதலில், முடி உதிர்கின்றது என்று அதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், இன்னும் முடி உதிர்வு அதிகரிக்கத்தான் செய்யும். கவலையே படாதீங்க.

ulundhu

குளிர்ச்சியான பொருட்களை தலையில் போடுவதன் மூலம் தலைவலி, சளி பிரச்சனை வருபவர்களும் இந்த வெயில் காலத்தில் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் முடி வளர்ச்சியில் நிறைய மாற்றத்தை காண முடியும்‌. இந்த வெயில் சீஸனுக்கு ஏற்ற ஹேர் பேக்கை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த ஹேர் பேக்கிற்க்கு தேவையான பொருட்கள் 2. உளுத்தம்பருப்பு, வெந்தயம், அவ்வளவு தான். உளுந்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 2 டேபிள்ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி முதலில் கழுவி விடுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். (உங்களுடைய முடிக்கு ஏற்றவாறும் இந்த பொருட்களைக் கூட குறைய சேர்த்துக்கொள்ளலாம். இரண்டையும் சம விகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.)

மிக்ஸி ஜாரில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு மொழுமொழுவென அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த கலவையை தலை முடி முழுவதும் ஹேர் பேக் போல அப்ளை செய்து கொள்ள வேண்டும். தலைமுடியின் மயிர்கால்களில் இந்தக் கலவை நன்றாக படவேண்டும். முடியின் கீழ் பக்கம் வரை மொத்தமாக இந்த பேக்கை தடவி அப்படியே முடியை கொண்டை கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேக் உங்களுடைய தலையில் அப்படியே நன்றாக 20 நிமிடம் ஊறட்டும். அதன் பின்பு நல்ல ஹெர்பல் ஷாம்பு போட்டு வாஷ் செய்து விட்டாலே போதும். முடி வளர்ச்சி நன்றாக அதிகரிக்கும். முடி பளபளப்பாக மாறும். நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உங்களுடைய முடிக்கு ஒரு ஷைனிங் கிடைக்கும்.

hair1

முட்டையோட வெள்ளைக்கரு நம்முடைய முடிக்கு அவ்வளவு ஊட்டச் சத்தைக் கொடுக்கும். ஆனால் நிறைய பேருக்கு அந்த வாடை பிடிக்காது. அதை தலையில் போட மாட்டார்கள். முட்டைக்கு பதில் அதே சத்துள்ள பொருட்கள் தான் இந்த உளுத்தம்பருப்பு. ஆனால் இதில் குளிர்ச்சி தன்மையும் அதிகம். வெந்தயமும் குளிர்ச்சித் தன்மை கொண்ட ஒரு பொருள் தான். இந்த பேக்கை பயன்படுத்துவதற்கு இந்த வெய்யில் காலம் தான் சிறந்தது.

long-hair

முடிந்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் இதை உங்களுடைய தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது இதை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக முடி உதிர்வு குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி பளபளப்பாக மாறும். உங்களது அழகை மேலும் அழகாக்கிக் கொள்ள இது ஒரு சுலபமான டிப்ஸ். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.