விழுந்து விழுந்து ஃபேஸ்பேக் போட்டும், வெள்ளையாக முடியாதவர்களுக்கு, உளுந்து சோப் போதும். கஷ்டப்படாமல் கருப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றலாம்.

face14
- Advertisement -

எவ்வளவு கருப்பாக இருக்கக்கூடிய சருமத்தையும் வெள்ளையாக மாற்றக்கூடிய சக்தி இந்த சோப்புக்கு உண்டு. இந்த சோப்பை காசு கொடுத்து கடையிலிருந்து நாம் வாங்கப் போவது கிடையாது. நம் வீட்டிலேயே நாமே தயார் செய்யப் போகின்றோம். சோப் தயார் செய்வதா. ரொம்ப கஷ்டமா என்று யோசிக்காதீங்க. உளுந்து உங்க வீட்டில் இருந்தால் போதும். மிக எளிமையான முறையில் இந்த சோப்பை தயார் செய்து விடலாம். உங்களுக்கு கலராக ஆசை இருந்தால் குறிப்பை தொடர்ந்து படித்து பலன் பெறலாம்.

முதலில் ஒரு கைப்பிடி அளவு உளுந்தை எடுத்து ஒரு முறை கழுவி விட்டு, அதன் பின்பு அதில் நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த உளுந்தை தண்ணீரையெல்லாம் வடிகட்டி விட்டு தனியாக எடுத்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி போட்டு, ஃபேன் காற்றில் பத்து நிமிடம் வரை ஆற வைத்து, அந்த உளுந்தை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்க வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். இதுவே ஒரு பேஸ்ட் போல தான் அரை பட்டு திக்காக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

ஒரு பெரிய உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி, சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கெட்டியாக அரைப்பட்டு இருக்கும் உளுந்துடன் இந்த உருளைக்கிழங்கு சாறை ஊற்றி பேஸ்ட் போல கலந்து தயாராக தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து பியர்ஸ் சோப் அல்லது கண்ணாடி போல இருக்கும் எந்த சோப்பை வேண்டும் என்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். வாங்கிய அந்த சோப்பை சின்னத்துண்டு துண்டுகளாக வெட்டி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இதை டபுள் பாயிலிங் மெத்தடில் சூடு செய்து கரைக்க வேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, அந்த தண்ணீரின் மேல் இந்த சோப்பு கிண்ணத்தை வைத்து விட்டால் போதும். அந்த கண்ணாடி சோப் கரைந்து விடும். கரைந்த கண்ணாடி சோபுடன் நீங்கள் கரைத்து வைத்திருக்கும் உளுந்தம் பருப்பு உருளைக்கிழங்கு பேஸ்ட்டை ஊற்றி, இதோடு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1 உள்ளே இருக்கும் ஜெல்லை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். (கரைந்த கண்ணாடி சோப்பு, உளுந்து உருளைக்கிழங்கு, விட்டமின் இ கேப்ஸ்யூல் ஜெல் இந்த நான்கு பொருட்களும் லிக்விட் ஆக இப்போது ஒன்றாக இருக்கிறது.)

- Advertisement -

சுடுதண்ணீரில் இருந்து அந்த கிண்ணத்தை தனியாக கீழே எடுத்து வைத்து ஆற வையுங்கள். இது வெதுவெதுப்பாக இருக்கும் போது ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி, நன்றாக ஆற வைத்து அப்படியே ஃப்ரீசரில் வைத்து செட் செய்தால், 8 மணி நேரத்தில் சூப்பரான சோப்பு உங்களுக்கு கிடைத்துவிடும். இந்த சோப்பை எடுத்து எப்போதும் போல வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.

தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளை இந்த சோப்பை போட்டு முகம் கழுவ வேண்டும். உங்களுடைய முகத்தை தண்ணீரில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்த சோப்பை கையில் நன்றாக தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த சோப்பை போட்டு நன்றாக வட்ட வடிவில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்து முகத்தை கழுவி விட்டால், நீங்கள் இருக்கக்கூடிய நிறத்திலிருந்து உங்களுடைய சருமம் இன்னும் கொஞ்சம் கூடுதல் பொலிவை பெறும். இந்த சோப்பை தினம் தோறும் பயன்படுத்தி வந்தீங்கன்னா இந்த ஒரு சோப் முழுமையாக தீர்ந்து போவதற்குள் உங்களுடைய சருமம் நிச்சயம் பொலிவாக மாறிவிடும்.

- Advertisement -