இந்த ரகசிய மசாலாவை அரைத்து போட்டு உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சா, சமையல் ராணி பட்டம் நிச்சயம் உங்களுக்கு தான் கிடைக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவல் சுவைக்கு எப்பேர்பட்ட நாக்கும் அடிமையாகிவிடும்.

potato-varuval
- Advertisement -

பொதுவாகவே வீட்டில் பெண்கள் ஏதாவது ருசியாக சமைத்து விட்டால், ஆண்கள் அவர்களுடைய கைகளுக்கு தங்க வளை போட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்கள் நிஜமாக தங்க வளையல் வாங்கி போட வேண்டாம். இந்த ஒரு வார்த்தையை கேட்டாலே பெண்களுக்கு கிரீடம் வைத்தது போல ஆகிவிடும். பெண்களின் மனசு சந்தோஷப்படும். உங்களுக்கும் இந்த சந்தோஷம் கிடைக்க வேண்டுமா. இந்த உருளைக்கிழங்கு வருவல் செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கொடுங்கள். சமையல் ராணி பட்டத்தோடு சேர்த்து தங்க வளையலும் நிச்சயம் கிடைக்கும்.

செய்முறை

இதற்கு ஒரு ஸ்பெஷல் மசாலாவை வறுத்து அரைக்க போகின்றோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிளகு 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து போட்டு 2 நிமிடங்கள் வறுக்கவும். இந்த இரண்டு பொருட்களும் மொறுமொறுப்பாக வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு சீரகம் 1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன் சேர்த்து கடாய் சூட்டிலேயே எல்லா பொருட்களையும் மீண்டும் கலந்து விடுங்கள். இந்த 4 பொருட்கள் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்து 250 கிராமிலிருந்து 300 கிராம் அளவு உருளைக்கிழங்குகளை முழுசாக குக்கரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும். பிறகு தோல் உரித்து அந்த உருளைக்கிழங்குகளை ஓரளவுக்கு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை 1 சின்ன துண்டு, கடுகு 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, வர மிளகாய் கிள்ளியது 2, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 போட்டு, நன்றாக வதக்குங்கள். வெங்காயம் வதங்கி வந்தவுடன் பெரிய பழுத்த தக்காளி பழம் 1 போட்டு, வதக்கவும்.

- Advertisement -

பிறகு பெருங்காயம் 1/4 ஸ்பூன், இந்த மசாலா பொருட்களுக்கெல்லாம் தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு இறுதியாக மல்லித்தூள் 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன், போட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, மிக்ஸி ஜாரில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியையும் போட்டு, கலந்து விடுங்கள்.

லேசாக தண்ணீர் தெளித்து இதையெல்லாம் கலந்து விடலாம். அடி பிடிக்காமல் இருக்கும். எல்லா மசாலா பொருட்களின் பச்சை வாடை நீங்கியது. இறுதியாக நாம் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இந்த மசாலாவில் கொட்டி நன்றாக கலந்து விடவும். மசாலாவும் வேக வைத்த உருளைக்கிழங்கும் ஒட்டி பிடிக்கும் வரை ஐந்து நிமிடங்கள் கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து மேலே பொடியாக கொத்தமல்லி தலையை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: எல்லாவிதமான சமையலுக்கும் சேர்த்து குழம்பு மிளகாய்த்தூளை இப்படி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சமைக்கும்போது சாம்பாருக்கு, குழம்புக்கு, வறுவலுக்கு என்று தனித்தனியாக மசாலாவை தேடி திரிய வேண்டிய அவசியமே இருக்காது.

சுட சுட இதை வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் சூப்பர் சுவை இருக்கும். ரசம் சாதம், தயிர் சாதம், இவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம். வெரைட்டி ரைஸ் ஸ்கூல் சைடிஷ் ஆக பரிமாறலாம். இதன் சுவை கறி சுவையை விட சூப்பராக இருக்கும்ன்னா பார்த்துக்கோங்க. மிஸ் பண்ணாம உங்க வீட்ல இப்படி ஒரு உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி ட்ரை பண்ண மறந்துடாதீங்க. சப்பாத்தி பூரிக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டாலும். அருமையாக தான் இருக்கும்.

- Advertisement -