உருளையில் பூக்கள் நிரப்பி வைப்பதும், கண்ணாடி தம்ளரில் எலுமிச்சை போட்டு வைப்பதும் இதற்காகவா? அதை எப்படி முறையாக செய்ய வேண்டும் தெரியுமா?

uruli-lemon-glass
- Advertisement -

பெரிய பெரிய கடைகளில் கூட வாசலில் அருகிலேயே அல்லது வாசலுக்கு எதிராக பெரிய உருளியில் தண்ணீரை நிரப்பி அதில் பூக்களை போட்டு வைத்திருப்பார்கள். பெரிய கடைகள் மட்டுமல்ல வியாபாரம் செய்யும் இடங்கள், சிறு சிறு தொழில் கூடங்களில் கூட இவ்வாறு செய்து வைப்பது உண்டு. அதே போல எலுமிச்சை பழத்தையும் கண்ணாடி தம்ளரில் போட்டு வைத்திருப்பார்கள். எதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது? இதை செய்பவர்கள் முறையாக எப்படி செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம்.

உருளியில் பூக்களை நிரப்பி வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் திருஷ்டிகள் அனைத்தும் கழியும் என்பதால் பெரிய பெரிய கடைகளில் வரும் வாடிக்கையாளர்களின் கண் திருஷ்டி கழிய இது போல வாசலில் செய்து வைப்பது உண்டு. இந்த உருளி வைக்கும் முறை பழங்காலம் முதலே அரசர்கள் கையாண்டு வந்துள்ளனர். இதை இன்றும் பல்வேறு வீடுகளில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

வீட்டிலும் உருளியை வைக்கலாம். அதில் நறுமணமிக்க பூக்களையும், தெய்வீக மணம் கமழும் படியான வாசனைப் பொருட்களையும் சேர்ப்பதன் மூலம் வீட்டில் நல்ல ஒரு வைப்ரேஷன் உண்டாகும். இந்த நேர்மறை அதிர்வலைகள் உங்களை நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வராமலிருக்க உருளியில் மரிக்கொழுந்தை சேர்ப்பார்கள். இதன் நறுமணம் வீட்டில் இருப்பவர்களின் மனநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்குமாம்.

உருளி வைக்கும் பொழுது பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன் ஆகிய உலோகங்கள் கொண்டதாக வைக்க வேண்டும். மற்ற உலோகங்களில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இரும்பு, எவர்சில்வர் போன்றவற்றில் இது போல் உருளி செய்து வைப்பதை தவிர்ப்பது நல்லது. மண் உருளி வைப்பதி யோகத்தை அருளும். ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி படைத்துள்ளது. இதில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட உருளியில் வாசனை மிகுந்த பன்னீர் ரோஜாவை மிதக்க விட்டால் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

- Advertisement -

உங்கள் வீட்டிற்கு வருபவர்களின் பார்வை முதலில் இந்த உருளியை நோக்கி செல்வதால் அவர்கள் தீய எண்ணத்தில் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தாலும் அது நல்ல எண்ணம் ஆக மாற்றம் அடைந்துவிடும். திருஷ்டிகள் நீங்கும், அதிர்ஷ்டம் பெருகும். இது போல வைக்கப்படும் உருளி கடைகள் மட்டும் அல்லாமல் வீட்டிலும் நாமே தயாரித்து வைக்கலாம். உருளி வைக்கும் பொழுது அதனை வெறும் தரையில் வைக்கக் கூடாது. அதற்கு கீழ் ஏதாவது ஒரு ஸ்டண்ட் போல தயாரித்து வைக்கலாம். அதே போல உருளி வைப்பவர்கள் அதில் இருக்கும் பூக்களை வாட விடக் கூடாது. வாடிய பூக்களை உடனே அகற்றி விட்டு புதிதாக பூக்களை பரப்பி விட வேண்டும். தண்ணீரையும் அதே போல அவ்வப்போது மாற்றி விட வேண்டும்.

கண்ணாடி டம்ளருக்குள் இதே போல எலுமிச்சை பழத்தை போட்டு பூக்களை மிதக்க விட்டால் கடுமையான கண் திருஷ்டிகளும் காணாமல் போகும். அது மட்டுமல்லாமல் உங்களை சுற்றி இருக்கும் தீய சக்திகள், துர்தேவதைகள் ஓடிவிடும். மேலும் மூதேவி என்று சொல்லப்படும் எதிர்மறையும் நம்மை விட்டு விலகி, ஸ்ரீதேவி என்கிற நேர்மறை நம்முடன் நிலைக்கச் செய்ய இது போல் செய்வது வழக்கம். நீங்களும் கடை, வியாபாரம், தொழில், அலுவலகத்தில் கூட தாராளமாக இது போல் செய்து வைத்து பாருங்கள் நல்லதே நிகழும்.

- Advertisement -