இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்தால் போதும். இறைசக்தி உங்கள் வீட்டிற்குள் நுழைய எந்த ஒரு தடையும் இருக்காது.

uruli3
- Advertisement -

இறை சக்தியானது நம்முடைய வீட்டிற்குள் நுழைந்து விட்டால், நிச்சயமாக வீட்டிற்குள் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற்றப்படும். ஆனால் இறை சக்தியே வீட்டிற்குள் நுழைய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தால், வீட்டில் நிச்சயமாக கஷ்டம் தான் இருக்கும். தரித்திரம் தான் பிடித்திருக்கும். முதலில் இறைசக்தியை நம்முடைய வீட்டிற்குள் எப்படி அழைப்பது. இறைசக்தியை ஆகர்ஷணம் செய்யக்கூடிய சுலபமான ஒரு முறையைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நல்ல தேவதைகள், தெய்வங்கள், குலதெய்வம், உங்கள் வீட்டில் நுழைய, நீங்கள் வரவேற்பு அறையில் வைக்க வேண்டிய அந்தப் பொருள் என்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

uruli1

நாம் எல்லோரும் அறிந்த தெரிந்த ஒரு பொருள் தான் அது. உருளி, ஆனால் அந்த ஊரிளி செம்பினால் செய்யப்பட்ட உருளியாக இருக்க வேண்டும். நிறைய பேர் வீடுகளில் மண்ணில் உருளி இருக்கும். பித்தளையில் உருளி இருக்கும். ஆனால் செம்பில் உருளி வைத்து பயன்படுத்த மாட்டார்கள். செம்பினால் வரவேற்பறையில் உருளி வைப்பது மிக மிக நல்லது.

- Advertisement -

செம்பில் சிறிய அளவில் இருக்கும் ஒரு உருளியை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி விடுங்கள். அந்த தண்ணீரில் இரண்டு வில்வ இலைகள், இரண்டு துளசி இலைகள், ஒரு தாமரைப்பூ, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு போட்ட இந்த தண்ணீரை அப்படியே வரவேற்பறையில் அழகாக வைத்து விடுங்கள். உங்கள் வீட்டிற்குள் இறைசக்தி நுழைவதற்கு எந்த ஒரு தடையும் நிச்சயம் இருக்காது. இந்த உருளி வைப்பதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணத்தையும் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

muperum-devargal

பொதுவாகவே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பது முப்பெரும் தேவர்களின் அருளாசியால் தான். அதாவது பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை.

- Advertisement -

செம்பில் உள்ள தண்ணீரில் சிவன் அம்சம் பொருந்திய வில்வ இலைகளை போட்டு இருக்கின்றோம். பெருமாள் அம்சம் பொருந்திய துளசி இலைகளையும் போட்டு இருக்கின்றோம். பிரம்மாவுக்கு விருப்பமான தாமரையும் அதில் மிதந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் அனைவரையும் வசியப்படுத்த கூடிய வாசனை மிகுந்த பொருட்களும் இந்த ஊருளியில் உண்டு.

uruli

ஆக முப்பெரும் தேவர்களும் உங்களுடைய வீட்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்து விட்டால் உங்களுடைய குடும்பத்திற்கும் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு பின்பு ஏது. கெட்ட தேவதைகளும் கெட்ட சக்திகள் உங்கள் வீட்டில் தங்குவதற்கு இடம் ஏது. மிக மிக சுலபமாக சொல்லப்பட்டுள்ள பரிகார முறையை தான் இது. இந்த ஒரு விஷயத்தை மட்டும் உங்களுடைய வரவேற்பறையில் செய்து பாருங்கள். இந்த உருளியை வைப்பதற்கு முன்பு உங்கள் வீட்டு வரவேற்பறையை ஒருமுறை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அசுத்தமாக இருக்கும் இடத்தில் உருளியை வைத்தால் தெய்வ கடாட்சம் நிலைக்காது.

vilvam1

இந்த உருளியில் இருக்கும் தண்ணீரை மட்டும் தினம்தோறும் மாற்றிவிட வேண்டும். அதன் உள்ளே இருக்கும் பொருட்களை வாரத்திற்கு ஒருநாள் மாற்றினால் போதும். அதாவது பூ இலை வாடாமல் இருக்கும் பட்சத்தில் அதன் உள்ளே இருக்கும் பொருட்களை வாரத்திற்கு ஒருநாள் மாற்றிக்கொள்ளலாம். தினமும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய வீட்டில் மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக வீட்டில் நல்ல மாற்றங்கள் வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -