பயனுள்ள பூஜை அறை குறிப்புகள் 15! இந்த விஷயங்களை உங்கள் பூஜை அறையில் செய்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு இல்லாமல் நிம்மதி எப்போதும் இருக்கும்.

vilakku-pooja-room
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை அல்லது பூஜை செய்வதற்கான இடம் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும். பூஜை செய்யும் இடத்திலும், பூஜைக்கு உரிய பொருட்களிலும் நாம் சின்ன சின்ன விஷயங்களின் மூலம் கவனம் செலுத்தினால் குடும்பத்தில் எந்த ஒரு சண்டை, சச்சரவுகளும் இல்லாமல் நிம்மதி இருக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. இந்த சில குறிப்புகளை பின்பற்றினால் பூஜை அறையை கையாள்வதும் சுலபமாக இருக்கும். சரி அப்படியான குறிப்புகள் என்னென்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

karpooram

1. நீங்கள் கற்பூரம் வைக்கும் டப்பாவில் கற்பூரம் சீக்கிரம் கரைந்தால் அதில் நாலைந்து மிளகுகளை போட்டு வையுங்கள் கரையாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

2. பூஜை அறையில் நீங்கள் ஊதுபத்தி ஏற்றும் பொழுது அதிக நேரம் நறுமணத்துடன் எரிய முனையை விட்டு விட்டு மற்ற பகுதிகளில் லேசாக தண்ணீரை தடவி விட்டு ஏற்றுவது நல்லது.

kungumam

3. குங்குமம் மற்றும் மஞ்சள் பூஜை அறையில் வைக்கும் பொழுது அந்த டப்பாவில் ஒரு கற்பூரம் போட்டு வையுங்கள், எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதில் பூஞ்சைகள் பிடிக்காது, நமத்து போகவும் செய்யாது.

- Advertisement -

4. பூஜை அறையில் எப்போதும் மயிலிறகு வைத்திருந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு குறையும். மேலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க பூஜை அறையில் உங்கள் குல தெய்வத்திற்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வையுங்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுது அதை காணிக்கையாக செலுத்துங்கள்.

one-rupee0

5. பூஜை அறையில் இருக்கும் பூஜை படங்கள் துடைப்பதற்கு சிரமமாக இருந்தால் சிறிதளவு விபூதி போட்டு துடையுங்கள் சுத்தமாகத் பளிச்சிட வைக்கும்.

- Advertisement -

6. பூஜை படங்களுக்கு பூக்களை சொருகி வைக்கும் பொழுது அடிக்கடி விழுந்து விடுகிறதா? அப்படி என்றால் படங்களின் பின்புறம் பேனா மூடி போன்ற ஏதாவது ஒன்றை வைத்து செல்லோடேப் போட்டு ஒட்டி விடுங்கள். அல்லது படத்தைச் சுற்றிலும் மேல்புறமாக ரப்பர் பேண்ட் போட்டு கட்டிவிடுங்கள். இப்போது பூக்களை சொருக வசதியாக இருக்கும்.

thiri1

7. நீங்கள் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் திரியை கற்பூரம் வைக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் விளக்கில் திரி போடும் பொழுது சட்டென எரியும். தினமும் திரி மாற்றுபவர்கள் கொஞ்சம் எண்ணெயில் திரியை ஊற வைத்தால் ஏற்றும் பொழுது சுலபமாக எரிய வைக்கலாம். விளக்கில் திரியை போட்ட பின் திரியின் நுனியில் கொஞ்சம் கற்பூரத்தை நொறுக்கி தடவிவிட்டு ஏற்றினாலும் சுலபமாக எரியும். எவ்வளவு காற்று வீசினாலும் அணையாது.

8. பூஜையறையை துடைக்கும் பொழுது தண்ணீரில் சிறிதளவு கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு துடைத்து எடுத்தால் எந்த ஒரு பூச்சிகளும், எறும்புகளும், ஈக்களும் அணுகாது. அறையும் தெய்வீக நறுமணமாக நீண்ட நேரம் இருக்கும்.

sambrani

9. கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றும் பொழுது அதன் மீது ஒரு சூடத்தை வைத்து ஏற்றினால் சூடம் எரிந்து சாம்பிராணி வேகமாக நறுமணத்துடன் எரியும். இதனால் சாம்பிராணி எரிய நெருப்பில் நீண்ட நேரம் சாம்பிராணியை பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

10. கற்பூரம் ஏற்றும் தூபக்கால் கருப்பாக மாறாமல் இருக்க, கற்பூரம் ஏற்றுவதற்கு முன்னர் கொஞ்சம் விபூதியை அதில் போட்டுக் கொள்ளுங்கள். விபூதியின் மீது சூடம் வைத்து ஏற்றினால் கருப்பு பிடிக்காது, சுத்தம் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

kamatchi-vilakku

11. எந்த ஒரு விளக்கிலும் தீபம் ஏற்றும் பொழுது விளக்கின் நுனிப்பகுதியை மீறி திரியை வைத்து ஏற்றினால் விளக்கில் தீபம் ஏற்றும் பொழுது விளக்கின் நுனிப்பகுதியில் ஜோதியானது காற்றில் அசைந்து கொண்டே இருக்கும். நுனி பகுதியில் இருக்கும் குழி பகுதியில் திரியை வைத்து தீபம் ஏற்றி பாருங்கள்! தீப ஜோதி அழகாக அலைபாயாமல் சுடர்விட்டு முத்து போல எரியும்.

12. அகல் விளக்கு வைக்கும் பொழுது அடியில் எண்ணெய் கசியாமல் இருக்க நெயில் பாலிஷ் தடவி காய விட்டு பின்னர் விளக்கு ஏற்றி வைக்கலாம்.

viboothi

13. பூஜை அறையில் தரைப்பகுதியில் விடாப்பிடியாக படிந்திருக்கும் எண்ணெய் கரையை போக்க விபூதி அல்லது கோதுமை மாவு பயன்படுத்தி லேசாகத் தேய்த்து துடைக்கலாம்.

14. பூஜைக்கு விளக்கேற்றும் எண்ணெய் பாட்டிலில் இருந்து விளக்கில் எண்ணெய் ஊற்றி விட்டு பார்த்தால் பாட்டிலின் வெளிப்புற பகுதியில் எண்ணெய் கசிந்து இருக்கும். இதற்கு பாட்டிலை சுற்றி காட்டன் துணியை மடித்து வைத்து அதை ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்டி விடுங்கள். எண்ணெய் கசிந்தாலும் அந்த துணி அதனை ஈர்த்துக் கொள்ளும்.

agal-vilakku-deepam

15. பூஜையறையில் எப்போதும் பேப்பர் துண்டுகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பூஜை அறையில் ஏதாவது ஒரு வேலையை செய்து விட்டு கையிலிருக்கும் எண்ணெய் கரையை துடைப்பதற்கு வசதியாக இருக்கும்.

- Advertisement -