வேக வேகமாக சமையலை முடிக்க, வீட்டில் நேரத்தை மிச்சப்படுத்த இந்த 8 டிப்ஸ் உங்களுக்கு உபயோகமாய் இருக்குமே! மிஸ் பண்ணிடாதிங்க.

fridge-karpooram
- Advertisement -

சில சமயங்களில் வேகமாக நமக்கு சமையலை முடித்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அவசர அவசரமாக சமைக்கும் பொழுது சட்டென ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை சுலபமாக எப்படி சமாளிப்பது? என்று சில குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அதே போல வீட்டில் நேரத்தை மிச்சப்படுத்த கூடிய வகையிலான குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் அவசரமான கால கட்டத்தில் நமக்கு அது உதவியாக இருக்கும். அப்படியான சமையல் மற்றும் வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

idly-maavu

குறிப்பு 1:
சில சமயங்களில் நாம் அரைத்து வைத்திருக்கும் இட்லி, தோசை மாவு அதிகமாக புளித்துப் போயிருக்கும். புளித்த மாவை வைத்து நம்மால் சட்டென எதுவும் செய்ய முடியாத நேரத்தில் 2 பத்தை தேங்காயை நறுக்கி மிக்சி ஜாரில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து தோசை வார்த்தால் மொறுமொறுவென புளிப்பில்லாத கிரிஸ்பியான சுவையான தோசை கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
பயறு வகைகளை சமைக்கும் பொழுது ஊற வைத்த பயறை வேகமாக குக்கரில் வேக வைக்க சிட்டிகை அளவிற்கு சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பை சேர்த்து பின்னர் விசில் விடலாம். குறைந்த நேரத்திலேயே பயறு வகைகள் வேகமாக சூப்பராக வெந்துவிடும்.

clothes-on-bed

குறிப்பு 3:
நாம் பயன்படுத்தாத பழைய துணி மணிகளை பீரோவில் சரமாரியாக அடுக்கி வைத்து இருப்போம். நீண்ட காலம் துணிமணிகளை நாம் எடுத்து பயன்படுத்தாவிட்டால் அதில் ஒருவிதமான துர்நாற்றம் வீசத் தொடங்கும். என்றாவது நீங்கள் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது திரும்பவும் துவைக்க வேண்டி இருக்கும். இதற்கு ஒரு டிஷ்யூ பேப்பரில் கொஞ்சம் சென்ட் தடவி நான்காக மடித்து துணிகளுக்கு அடியில் ஆங்காங்கே வைத்து விட்டால் போதும். எந்த விதமான துர்நாற்றமும் உங்கள் பீரோவில் அடிக்காது.

- Advertisement -

குறிப்பு 4:
சமையல்கட்டில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியவில்லையா? நீங்கள் பாத்திரங்களை அடுக்கி வைத்திருக்கும் இடத்தில் ஒரு பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரில் கொஞ்சம் கற்பூரத்தை நுணுக்கி மடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு ஆங்காங்கே வைத்து விடுங்கள். அதன் வாசத்திற்கு ஒரு கரப்பான் பூச்சி கூட எட்டிப்பார்க்காது. மேலும் துர்நாற்றம் வீசாமல் நல்ல தெய்வீக மணம் சமையலறையில் வீசும்.

ant-erumbu

குறிப்பு 5:
சமையலறையில் இனிப்பு பதார்த்தங்கள் சர்க்கரை, வெல்லம் அல்லது எறும்புகள் வரக்கூடிய ரவை, எண்ணெய் போன்ற பொருட்கள் வைத்திருக்கும் இடங்களில் இதே போல கற்பூரத்தை நுணுக்கி தூவி விட்டுக் கொண்டால் எறும்புகளும், ஈக்களும் வராது.

- Advertisement -

குறிப்பு 6:
அடிக்கடி பிரிட்ஜை சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும். எனவே ஃப்ரிட்ஜில் ஒவ்வொரு கவுண்டர் பகுதிகளிலும் மெல்லியதாக இருக்கும் பிளாஸ்டிக் கவரை போட்டு மடித்து விட்டால் போதும். நீங்கள் என்றாவது ஒருநாள் சுத்தம் செய்யும் பொழுது அந்த கவரை எடுத்து விட்டு சுலபமாக சுத்தம் செய்யலாம்.

curd-rice

குறிப்பு 7:
குழந்தைகள் அல்லது அலுவலகத்திற்கு செல்பவர்கள் டிபன் பாக்ஸில் தயிர் சாதம் கட்டிக் கொண்டு போகும் வேளையில் தயிர் சாதம் சாப்பிடும் போடுது இறுகிப் போயிருக்கும். ஏதோ தயிரே இல்லாதது போல் இருக்கும். இது போல டிபன் பாக்ஸில் தயிர் சாதத்தை கட்டிக் கொடுக்கும் பொழுது சூடான சாதத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தயிரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும் இறுதியாக கால் டம்ளர் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்தால் எவ்வளவு நேரமானாலும் இறுகாமல் இருக்கும். தாளிப்பு சேர்ப்பவர்கள் ஆறிய பின் சேர்த்து கலக்க வேண்டும், சூடாக சேர்த்தாலும் தயிர் சாதம் இறுகிவிடும்.

குறிப்பு 8:
ஒவ்வொரு முறை திறக்கும் போதும் உங்கள் வீட்டு பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் உடைய நாற்றம் வீசாமல் இருக்க, சிறிய பிளாஸ்டிக் கப்பில் பேக்கிங் சோடாவை போட்டு மூலையில் ஓரமாக வைத்து விடுங்கள். பேக்கிங் சோடா பிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை ஈர்த்து வைத்துக் கொள்ளும். அல்லது டிஷ்யூ பேப்பரை நனைத்து வைத்தாலும் துர்நாற்றம் வீசாது.

- Advertisement -