இந்த லிக்விடை 2 சொட்டு உதட்டின் மேல் தடவினால் கருத்து போன உதடு கூட இரண்டே நாட்களில் பிங்க் நிறத்திற்கு மாறும்.

lip
- Advertisement -

நிறைய பேருக்கு உதடு பார்ப்பதற்கு ரொம்பவும் கருப்பு நிறத்தில் இருக்கும். சில பேருக்கு வெளிர் நிலத்தில் வெளுத்து போய் கூட உதடுகள் காணப்படும். ரோஜா இதழ் போல அழகான பிங்க் நிறத்தை உதடுகள் பெற வேண்டும் என்றால் லிப்ஸ்டிக் போடுவது மட்டும் ஒரு வழி கிடையாது. அது செயற்கையான ஒரு அழகை நம் உதட்டிற்கு கொடுக்கும். இயற்கையாகவே உங்களுடைய உதடுகள் லிப்ஸ்டிக் போட்டது போல, பிங்க் நிறத்தில் மாற இந்த ஒரு லிக்விட் போதும். இந்த லிக்விடை சுலபமான முறையில் எப்படி தயார் செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த லிக்விடை தயாரிப்பது ரொம்ப ரொம்ப சுலபம். காய்ந்த ரோஜா இதழ்கள் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், கிலிசரின் – 1 ஸ்பூன், சுத்தமான தேன் – 1 ஸ்பூன், இந்த பொருட்கள் மட்டும் நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ந்த ரோஜா இதழ்களை போட்டு அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இதை டபுள் பாய்லிங் மெதடில் சூடு செய்து வடிகட்டி எண்ணெயை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ரோஜா இதழ்களை நன்றாக பிழிந்து தேங்காய் எண்ணெயை வடித்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரோஜா இதழ்களின் சத்து நிறைந்த தேங்காய் எண்ணெயுடன் கிளசரின் – 1 ஸ்பூன், சுத்தமான தேன் – 1 ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் நமக்கு தேவையான லிக்விட் தயார். ஒரு மாதம் வரை இந்த லிக்விட் ரூம் டெம்பரேச்சரில் வைத்திருந்தாலே கெட்டுப் போகாது. பயன்படுத்துவதற்கு முன்பு இதை நன்றாக குலுக்கி விட்டு பயன்படுத்துங்கள்.

- Advertisement -

உங்களுடைய உதட்டில் தினம் தோறும் இரண்டு வேலை இந்த எண்ணெயை தடவலாம். லேசாக விரல்களில் தயார் செய்து வைத்திருக்கும் இந்த எண்ணெயை தொட்டு, உதட்டின் மேல் வட்ட வடிவில் நன்றாக மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். இரண்டு வாரம் தொடர்ந்து தினம் தோறும் இந்த எண்ணெயை உதட்டில் தடவி மசாஜ் செய்து வர உதட்டில் இருக்கும் கருப்பு நிறம் படிப்படியாக குறைய தொடங்கும். உதடு பிங்க் நிறத்திற்கு மாறும். தொடர்ந்து ஒரு மாதம் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நீங்களே நம்ப முடியாத நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கூடுமானவரை உங்களுடைய உதட்டில் இந்த லிக்விடை தடவிய பின்பு உதட்டுக்கு மலிவான அடர்த்தியான லிப்ஸ்டிக் போடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உதட்டுச் சாயங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலும், உதடு கருத்து போகத்தான் செய்யும். நிறைய கெமிக்கல் கலந்து இருக்கும் எந்த ஒரு பொருளையும் உதட்டிற்கு பயன்படுத்தாதீர்கள். உதட்டை எப்போதும் ஈரத் தன்மையோடு வைத்துக் கொள்ளுங்கள். உதடு டிரையாக கூடாது. எந்த ஒரு கெமிக்கலும் கலக்காத சுத்தமான ஈரத்தன்மையை கொடுக்கும் வேஸ்லினை உதட்டுக்கு பயன்படுத்துங்கள்.

- Advertisement -