உங்களுக்கு சொந்த வீடு, சொத்துக்கள் அமைய இவ்விரதம் மேற்கொள்ளுங்கள்

sevvai-murugan-peruman

பூமியில் இருக்கும் அனைத்தின் மீதும் நவகிரகங்களின் தாக்கம் இருக்கின்றன என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். நமது முன்னோர்கள் காலத்தை நமக்கு காட்டும் நாள், வருடம் போன்றவற்றில் 7 நாட்கள் கொண்ட ஒரு வாரம் காலத்திற்கு ராகு – கேது கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு வார தினங்களுக்கு பெயர் வைத்தனர். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடன் செவ்வாய் கிழமை உண்டாயிற்று. இந்த செவ்வாய் கிழமை அன்று மேற்கொள்ள படும் செவ்வாய் கிழமை விரதம் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord Murugan

நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துகள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் மேற்கண்ட அனைத்து விடயங்களில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி நன்மைகளை பெற செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப் பெருமானை செவ்வாய் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

new-home

மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை உளமார வழிபடுவதால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துகள் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதையும் படிக்கலாமே:
நரசிம்மர் விரதம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tuesday vratham in Tamil. It is also called as Murugan viratham in Tamil or Sevvai kilamai viratham in Tamil or Sondha veedu katta in Tamil.