ஒவ்வொரு மாதமும் ஏகாதசி என்பது வரும். இது வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசியாக வரும். ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை உத்தான ஏகாதசி என்று கூறுகிறோம். அன்றைய நாளில் நாம் பெருமாளை வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் யோகமான வாழ்க்கை அமையும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட உத்தான ஏகாதசி அன்று பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
உத்தான ஏகாதசி வழிபாடு
திருப்பாற்கடலில் யோக நித்திரையில் இருக்கக்கூடிய பெருமாள் நாளைய தினத்தில் தான் கண்விழிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த வைபவம் ஸ்ரீரங்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. கடந்த நான்கு மாதங்களாக மூலவரான பெருமாளை வழிபடுவதற்குரிய வாய்ப்புகள் கிடைத்திருக்காது. உற்சவரை தான் வழிபட்டு இருப்பார்கள். நாளைய தினத்திலிருந்து தான் பெருமாளை வழிபட முடியும். ஏனென்றால் அவர் இதுவரை நித்திரையில் இருந்திருப்பார். இப்பொழுது விழித்திருக்கிறார். விழித்திருக்கும் நேரத்தில் நாம் பெருமாளை வழிபட வேண்டும் என்பதுதான் அதன் முக்கியமான கருத்து. அதனால் பெருமாள் கண்விழிக்கும் சமயத்தில் அவரிடம் நம்முடைய வேண்டுதலை வைத்து வழிபாடு செய்தோம் என்றால் அவர் நம் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவதோடு நமக்கு யோகமான வாழ்க்கை அமைத்து தருவார் என்று கூறப்படுகிறது.
அன்றைய தினத்தில் துளசியை செடியில் இருந்து பறிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை சாற்றுவதும் மிகவும் விஷேசமான ஒன்றாக கருதப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் துளசி செடிக்கு தீபம் ஏற்றி கற்பூர ஆரத்தி அனைத்தும் காட்டி வழிபாடு செய்வதும் அதீத பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு துளசி மாலை வாங்கி கொடுப்பதும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை தரும்.
முடிந்த அளவிற்கு இந்த ஏகாதசி சமயத்தில் உபவாசம் இருந்து பெருமாளை வழிபட்டோம் என்றால் அதற்குரிய பலன் பல மடங்கு அதிகமாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏகாதசி விரத குறிப்புகளில் எந்த ஒரு விரதத்தை இருந்தாலும் அதற்குரிய பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் ஏகாதசி விரதத்தை இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதைப்போல் எந்த விரதமும் இருக்காமல் ஏகாதசி விரதத்தை மட்டும் இருந்தாலே அவர்கள் நினைத்தது அனைத்தும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏகாதசி அன்று அதுவும் பெருமாள் கண் விழிக்கக்கூடிய ஏகாதசியான உத்தான ஏகாதசி அன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் வீட்டிலேயே பெருமாளின் சிலைக்கு பூஜை செய்வதும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.
இதையும் படிக்கலாமே:கல்வியில் பின் தங்கியவர்கள் செய்யும் பரிகாரம்
பல யோகங்களையும் செல்வ செழிப்பையும் வாரி வழங்கக்கூடிய பெருமாளுக்கு உகந்த திதியாக கருதக்கூடிய ஏகாதசி திதியை முழு மனதோடு அவரை நினைத்து உபவாசம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவரின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.