வாயு தொல்லை நீங்க, வயிறு உப்பசம் சரியாக வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே! எதற்கு அவஸ்தைப்பட வேண்டும்?

stomach-pain
- Advertisement -

வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இன்று அதிகமாக மக்களை பாதித்து வருகிறது. உணவு முறை மாற்றத்தினால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும், இயற்கையான வழியில் அதற்கு தீர்வு காண்பது ஒன்றே நன்மை தரும். வயிறு உப்புசம், வாயு தொல்லை போன்றவை சாதாரண பிரச்சினையாக தோன்றினாலும், இது நம்முடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்க கூடிய முக்கியமான பிரச்சினையும் கூட! இதிலிருந்து விடுபடுவதற்கு எளிய வழிகள் இருக்கும் போது, எதற்காக நாம் அவஸ்தை பட வேண்டும்? வாயு தொல்லை, வயிறு உப்புசம் நீங்க வழிகள் என்ன? என்பதை தான் இந்த பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வயிற்றில் சேரும் வாயு ஏதாவது ஒரு வழியில் வெளியேறாவிட்டால், அது வயிற்றிலேயே தங்கி வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். இதனால் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இதிலிருந்து ரொம்பவே எளிமையாக விடுபடுவதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, நம் வீட்டில் இருக்கும் இந்த மூன்று மூலிகை பொருட்கள் வயிறு முழுவதையும் சுத்தம் செய்துவிடும் ஆற்றல் கொண்டுள்ளது.

- Advertisement -

அந்த காலத்தில் நம்முடைய சாப்பாட்டு முறை வேறு, ஆனால் இன்று இருப்பது வேறு என்பதால் இதனை நம் உடலானது எல்லா சமயங்களிலும் ஏற்றுக் கொள்வது இல்லை. தொடர்ந்து ஒரே வகையான உணவுகளை சாப்பிடும் பொழுது உடல் இது போல பிரச்சனைகளை உங்களுக்கு கொடுக்கிறது. வாயு தொடர்பான பொருட்களை அடிக்கடி சமைத்து உண்பதை தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் இதை ஒரு டம்ளர் சாப்பிட்ட பிறகு குடித்துப் பாருங்கள், நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும்.

ஒரு டம்ளர் சுடு தண்ணீரை கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாலைந்து புதினா இலைகளை பிரஷ்ஷாக கழுவி சுத்தம் செய்து போட்டுக் கொள்ளுங்கள். அரை ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் வயிறு உப்புசத்தை குறைக்கும். தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். அப்படியே மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

சுடுதண்ணீர் பாதி அளவிற்கு நன்கு ஆறியதும் புதினா, சீரகம் மற்றும் இஞ்சியின் சாறு அதில் இறங்கி இருக்கும். அதன் பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து இந்த கசாயத்தை குடிக்க வேண்டும். வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் இதை தினமும் பருகலாம். அப்படி அல்லாதவர்கள் வாரம் ஒருமுறை பருகினால் இந்த மாதிரியான பிரச்சினைகளை முன்கூட்டியே தடுத்து விடலாம்.

ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கூட இதை தாராளமாக கொடுக்கலாம். முற்றிலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்து உள்ளதால், இதில் பக்க விளைவுகளுக்கு வேலை இல்லை. இஞ்சிச் சாறு, புதினாச் சாறு, சீரகம் ஆகியவற்றின் சாறுகள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுது, நம் உடலில் இருக்கும் தேவையற்ற வாயு வெளியேறிவிடும். இதனால் வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகள் நொடியில் நீங்கும் அற்புதம் நடக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -