மாதம் தோறும் வீட்டு வாடகையை இப்படி கொடுங்க. சீக்கிரம் சொந்த வீட்டுக்கு குடி போகும் யோகம் வரும்.

house
- Advertisement -

சொந்த வீட்டில் குடி இல்லாமல் வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் மாதாமாதம் கட்டாயம் ஹவுஸ் ஓனருக்கு வாடகை கொடுத்து தான் ஆக வேண்டும். முதல் தேதி வந்து விட்டாலே, முதலில் நம் நினைவிற்கு வருவது இந்த வீட்டு வாடகை தான். வீட்டு வாடகையை எந்தக் கிழமையில் எந்த நேரத்தில் எப்படி கொடுத்தால் சீக்கிரம் சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதை பற்றிய சின்ன ஆன்மீக ரீதியான குறிப்பைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சீக்கிரமே வாடகைக்கு பதில், ஹவுசிங் லோன் கட்டுவதற்கான நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. அதனால் தான் இந்த பதிவை படிக்கிறீங்க. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த தகவலை நாமும் தெரிந்து கொள்வோம்.

நமக்கு சொந்த வீடு இல்லை. நாம் குடியிருப்பதற்காக நமக்காக ஒரு வீட்டை ஹவுஸ் ஓனர் கொடுத்திருக்கிறார். வாடகை கொடுக்கும் போதே இந்த வீட்டுக்கு இவ்வளவு வாடகையா. இந்த வாடகையை ஹவுஸ் ஓனர் கையில் கொடுக்க வேண்டுமா. என்ற சளிப்போடு வாடகையை கொடுக்கக் கூடாது. நாம் குடியிருக்க கடவுள் நமக்கு இவ்வளவு நல்ல வீட்டை கொடுத்து இருக்கிறார். அதற்காக நன்றி சொல்லி ஹவுஸ் ஓனருக்கும் மனதார விட்டு வாடகையை கொடுங்கள். யாரும் சும்மா எந்த பொருளையும் நமக்கு கொடுக்க மாட்டாங்க அல்லவா. அப்படித்தான் வீடும். குடியிருப்பதற்கான வாடகை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும். ஆகவே சும்மா அடுத்தவங்களுக்கு காசு கொடுப்பதாக நினைச்சு வாடகையும் கொடுக்காதீங்க. மன நிறைவோடு ஹவுஸ் ஓனர் கையில் வாடகையை கொடுத்து விடுங்கள். இது முதல் குறிப்பு.

- Advertisement -

அடுத்து கூடுமானவரை முதல் தேதியே வாடகையை கொடுக்க வேண்டாம்‌. அடுத்தடுத்த தேதிகளில் அதாவது இரண்டு தேதிக்கு மேல் ஐந்து தேதிக்குள் வாடகையை கொடுக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வாடகை கொடுக்கக்கூடிய கிழமை என்பது செவ்வாய்க்கிழமையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், செவ்வாய் ஹோரை இருக்கிறது. அப்போது உங்கள் வீட்டு வாடகை நீங்கள் செலுத்தலாம்.

சில பேர் வாடகையை வங்கிக் கணக்கில் செலுத்துவார்கள் அப்படி இருந்தாலும் சரி. செவ்வாய்க்கிழமை இந்த குறிப்பிட்ட மதிய நேரத்தில் வாடகையை கொடுத்து வாருங்கள். இப்படி செய்யும் போது சீக்கிரமே உங்களுக்கு சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. முடிந்தால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை இருக்கிறது. அப்போதும் வாடகையை கொடுக்கலாம்.

- Advertisement -

வாடகை வீட்டிலேயே நீங்கள் குடி இருந்தாலும் சரி, அதை உங்களுடைய சொந்த வீடு போல தான் பார்த்துக் கொள்ள வேண்டும். சில பேர் இது வாடகை வீடு தானே இந்த வீட்டை எதற்காக சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். கழிவறையை முழுமையாக சுத்தம் செய்ய மாட்டார்கள். வீட்டு கதவு ஜன்னல் போன்ற விஷயங்களை சரியாக பராமரித்து வரமாட்டார்கள்.

அப்படி கிடையாது. நீங்கள் குடியிருக்கும் போது நீங்கள் இருக்கக்கூடிய வீட்டை எந்த அளவிற்கு சுத்தபத்தமாக கோவில் போல் வைத்துக் கொள்கிறீர்களோ. அந்த வாடகை வீட்டை எந்த அளவிற்கு பத்திரமாக பார்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு நன்மைகள் உங்களுக்கு நடக்கும். நாம் செய்யக்கூடிய நல்லதுக்கான பலனை இறைவன் எப்போதுமே உடனடியாக கொடுத்து விட மாட்டான். ஆகவே கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நல்லதே நினையுங்கள் நிச்சயமாக ஒரு சில நாட்களில் உங்களுக்கான சொந்த வீடு கட்டும் யோகத்தை அந்த ஆண்டவன் காண்பித்துக் கொடுப்பான் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -